Mangavilai

'முற்றம்'

எங்கள் பகுதியில் பெண்கள் எத்தனை வயதானாலும் உழைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் தனது முற்றத்தில் அமர்ந்து தென்னை ஓலையிலிருந்து 'ஈக்கு'உருவுகிறார்கள்.தினசரி குறைந்தபட்சம் அவர்கள் நூறு ரூபாய் சம்பாதிப்பார்கள்.

முற்றம் அன்றாடம் வாழ்க்கையின் எல்லாவற்றுக்குமானது. அங்கு விளையாடலாம்,கயிற்று கட்டிலில் உறங்கலாம்,ஓரமாக இருக்கும் சிமெண்ட் தொட்டியில் பிடித்து வைத்திருக்கும் நீரில் நீராடலாம்,மரத்திற்கு மரம் கட்டியிருக்கும் 'அசை' யில் துணிகாய போடலாம், அந்தியில் ஒட்டு மொத்த உறவுகளும் அமர்ந்து பெரும் பாடுகளை உரையாடலாக நிகழ்த்தும் களம் அது.முற்றமே வீட்டின் திறந்தவெளி விசாலமான வரவேற்பறை.வேம்பு இதமான நிழலையும் காற்றினையும் சுழன்று வீசும்.

அந்த அம்மாவின் அருகில் இருக்கும் ஓலைக் கிடுவினை பாருங்கள் வீட்டு உபயேக பொருட்கள் சிலவற்றை சொருகி வைத்துள்ளார்கள்.இன்றைய தேவையான மாஸ்க்கும் அதில் இடம் பெற்றுள்ளது.

அறைகள் தேவையற்ற உலகு எங்கள் கிராமம்.இங்கு முற்றத்தைப் போல விசாலமான மனமும் உண்டு.

Courtesy: Jawahar Clicks