அவசரகாலங்களில் வெளியிடும் செய்திகளில் பரபரப்பு மட்டும் போதுமா?....

குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் குழித்துறை உட்பட பகுதிகள் தண்ணீரில் சூழ்ந்தது. இச்சமயத்தில் பாதிப்புகள் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் நன்பர்கள் பலர் தகவல்களும், படங்களும் பரப்பினர். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் பிரசத்தி பெற்ற கோயில் ஒன்று தண்ணீரில் முழுமையாக மூழ்கிய படத்தை யாரோ பதிவு செய்தனர். இது உண்மையென கருதி பலபேர் படத்தை பகிர்ந்து கொண்டனர். ஆனால் குறிப்பிட்ட கோயிலில் இந்த நிலை தற்போதைய வெள்ளப் பெருக்கில் ஏற்படவில்லை. 2010ல் எடுத்த படத்தை யாரோ தவறான எண்ணத்தில் பதிவு செய்து கொண்டதான உண்மையை மக்கள் புரிந்துக் கொள்வதற்குள் தமிழ் பத்திரிகை ஒன்று இப்படத்தை செய்தியாக வெளியிட்டது. 
இதில் கொடுமை என்னவென்றால் நேற்று இப்படத்தை ஒற்றசேகரமங்கலம் சிவன் கோயில் தண்ணீரில் மூழ்கியதாக செய்தியாக்கி வெளியிட்டது மலையாளப் பத்திரிகை ஒன்று . தமிழகத்தில் அதிக பிரசாரமுடைய தமிழ் பத்திரிகை இன்று இப்படத்தை போட்டு கோட்டயம் மாவட்டத்தில் பத்ரகாளி கோயில் தண்ணீரில் மூழ்கியதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. 
ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பரபரப்பை ஏற்படுத்த உறுதி செய்யப்படுத்தாத தவறான செய்திகளை வெளியிடுவது மக்களை ஏமாற்றுவதுடன் தங்களின் விஸ்வாசத்தையும் இழக்கின்றனர்.

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 1643