
நீண்ட தூரம் பயணித்து வாகனம் நிறுத்தவும், உள்ளே நுழையவும் கட்டணம் கொடுத்து, அருவி பக்கம் வரும் போது குளிக்க தடை என்பது சுற்றுலா பயணிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம். இந்நிலையில் தண்ணீர் குறைவாக வீழுகின்ற பகுதியில் குளிக்க அனுமதித்திருப்பது வரவேற்கதக்க முடிவே. ஆனால் குளிப்பதற்காக இறங்கும் பயணிகள் ஆபத்தை உணராமல் மற்ற பகுதிக்கு சென்று ஆபத்தில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் அதிகமுள்ளது. ஆகவே பேரூராட்சி நிர்வாகம் முழு கவனத்துடன் கண்காணிப்பை பலப்படுத்துவது அவசியம்.


Posted by