சக்ரபாணி உயர்மட்ட பாலமும் வரலாற்று சிறப்புமிக்க தொட்டி பாலமும்...


கர்ம வீரர் காமராஜர் ஆட்சி காலத்தில் சிற்றார் அணைகளை உருவாக்கி சிற்றார் பட்டணம் கால்வாயும் அமைத்தார். கால்வாய் கடந்து வரும் பகுதிகளில் தகுதியான வல்லுனர்களை கொண்டு அமைத்த தொட்டி பாலங்கள் இன்றும் ரசிக்கவும், வியக்கவும் வைக்கிறது...
கோதையாறும், சிற்றாறும் இணைந்து பாயும் சக்கரபாணி பகுதியில் அமைத்துள்ள தொட்டிப் பாலம் இதில் முக்கியமான ஒன்றாகும்...
மாத்தூர் தொட்டிப் பாலத்தை விட சிறிய பாலம் என்றாலும் இங்கும் இயற்கை அழகைரசிக்கலாம்...
தொட்டிப் பாலத்தின் அருகே ஆற்றை கடக்க உயர்மட்ட பாலம் ஒன்று அவசியம் என்பது அப்பகுதி மக்களின் வருடக்கணக்காக பூர்த்தி செய்யப்படாத கோரிக்கையாக இருந்தது...
மக்களின் அவசியத்தை உணர்ந்த மாவட்டத்தின் வளர்ச்சியை குறிக்கோளாக பணியாற்றிய முன்னாள் மாவட்ட கலக்டர் எஸ்.நாகராஜன் அரசின் பார்வைக்கு கொண்டு சென்று 460 லட்சம் பெற்றுக் கொடுத்தார்...
காமராஜர் நினைவுடன் கம்பீரமாக நிற்கும் தொட்டி பாலத்தின் அழகை ரசிக்க நாகராஜர் முயற்சியால் கட்டப்பட்ட புதிய பாலம் கூடுதல் வசதியாக அமைந்துள்ளது..
அரசு தரப்பில் திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் பாலத்தில் போக்குவரத்து தடையின்றி நடக்கிறது...
சக்ரபாணியின் அழகை நீங்களும் நேரில் சென்று ரசியுங்கள்...

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 4898
   

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com