சிற்பக்கலையின் கோயில் கட்டுமான அளவுகோல்கள்

சிற்பக்கலையில் கோயில்கள் கட்டுவதற்கென்று சில முழக்கோல அளவுமுறைகள் தமிழ்நாட்டில் வழங்கப்பெற்று வந்துள்ளன. கிஷ்கு முழக்கோல் என்ற அளவுகோல் இதனை தஞ்சை முழக்கோல் என்றும் அண்ணாமலை முழக்கோல் என்றும் அழைப்பர். இந்த முழக்கோல் அளவுமுறைக் கொண்டு அங்குள்ள பெரியக்கோயிலும், அண்ணாமலைக்கோயிலும் நிர்மானிக்கப்பட்டுள்ளன. இதுபோல தில்லை முழக்கோல் என்பது பிராஜாபத்திய முழக்கோல் , மதுரை முழக்கோல் என்பது அதம கிஷ்கு முழக்கோல். தில்லை ஆடாவல்லான் மற்றும் மதுரை மீனாட்சி கோயில்கள் இம்முழக்கோல்களால் அளவீடு செய்யப்பட்டு கட்டப்பட்டவை. தமிழகத்தின் அதிகமான கோயிகள் தஞ்சை, தில்லை மற்றும் மதுரை முழக்கோல் கொண்டு நிர்மானிக்கப்பட்டவை. பழனிக்கோயில் கட்ட மதுரை முழக்கோலான அதம கிஷ்கு முழக்கோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோயில்கள் கட்ட பயன்படும் முழக்கோல்களில் தில்லை முழக்கோல் அளவில் பெரியது. மதுரை முழக்கோல் அளவில் சிறியது. அதுபோல வீடு, மாளிகை, அரண்மனை, கோயில்கள் கிஷ்கு முழம், பிராஜாபத்திய முழம் கொண்டும், வண்டி, படுக்கை கிஷ்கு முழம் கொண்டும், மனையிடங்கள் தனுர்கிரஹ முழம் கொண்டும் அளவிடப்படவேண்டும் கயிறு சாலைகளை அளக்க பயன்படும்.
சிற்ப நீட்டல் அளவை முறை வாய்பாடு
எட்டு பரமாணு ஒரு தேர்த்துகள்
எட்டு தேர்த்துகள் ஒரு மயிர் நுனி அகலம்
எட்டு மயிர் நுனி அகலம் ஒரு ஈர்
எட்டு ஈர் ஒரு பேன்
எட்டு பேன் ஒரு நெல் (யவை) (செந்நெல்) 
எட்டு நெல் அகலம் (யவை) ஒரு விரல்(அங்குலம்) 
அங்குலம் மானங்குலம் என அழைக்கப்படும் (மானம்(அளவை)+ அங்குலம்)
மானங்குலம் மூன்று வகை
எட்டு நெல் அகலம் (யவை) ஒரு விரல்(அங்குலம்) என்பது உத்தமாங்குலம்
எழு நெல் அகலம் (யவை) ஒரு விரல் (அங்குலம்) என்பது மத்திமாங்குலம்
ஆறு நெல் அகலம் (யவை) ஒரு விரல்(அங்குலம்) என்பது அதமாங்குலம்.
செந்நெல் அதன் அகலத்தைப்போல இரண்டு மடங்கு அதன் நீளம்.
ஆறு மானாங்குலம் ஒரு தாளம்
இரண்டு தாளம் ஒரு விதஸ்தி
இரண்டு விதஸ்தி அல்லது 24 விரல் ஒரு ஹஸ்தம் அல்லது தச்சு முழம்.
முழக்கோல் அளவைகள் 
24 விரல் கொண்ட முழம் என்பது கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் என்பது பிராஜாபத்தியம்
26 விரல் கொண்ட முழம் என்பது தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் என்பது தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் என்பது பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் என்பது வைதேகம்
30 விரல் கொண்ட முழம் என்பது வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் என்பது பிரகிர்ணம்
24 விரல் அளவு கொண்ட கிஷ்கு முழத்தை உத்தம கிஷ்கு முழம் 
231/2 விரல் அளவு கொண்ட கிஷ்கு முழத்தை மத்திம கிஷ்கு முழம் 
231/4 விரல் அளவு கொண்ட கிஷ்கு முழத்தை அதம கிஷ்கு முழம் ஆகும்
24 விரல் ஒர் கிஷ்கு முழம்
4 கிஷ்கு முழம் ஒரு தனுர் தண்டம்
8 தண்டம் அல்லது 32 கிஷ்கு முழம் ஒரு ரஜ்ஜூ அல்லது கயிறு

Anantha Subramonian Posted by Anantha Subramonian

Anantha Subramonian

views: 3805
   

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs