நாஞ்சில் நாடு உட்பட்ட குமரி மாவட்டத்தில் நெற் விவசாயத்தை மீண்டு எடுப்போம்...


திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் நாஞ்சில் நாடு செழிக்க பல்வேறு நீர் சேமிப்பு திட்டங்களை ஏற்படுத்தினர்.உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க நெற் விவசாயத்தை பாதுகாக்கவே மன்னர்கள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர்.

நாஞ்சில் நாடு உட்பட்ட குமரி மாவட்டத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் 85,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் பயிரிடப்பட்டதாம். ஆனால் அதிக லாபம் எதிர்பார்த்தும், சாதாரண மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்த காரணத்தாலும் பெரும்பாலானோர் வயல்வெளிகளை நிரப்பி மாற்று விவசாயம் செய்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வயல்களை நிரப்பி பிளாட் போட்டு பணம் சம்பாதித்தனர் சிலர். தற்போது 6000 ஏக்கர் மட்டுமே நெற் விவசாயம் செய்யப்படுகிறதாம்.

வயல்கள் காணமல் போனதும் காலநிலையில் பெரும் மாற்றம் உருவானது, நிலத்தடி நீர் குறைந்தது. உணவிற்கும் பஞ்சம் ஏற்படும் சூழலில் உள்ளோம். இந்நிலையில், வருடங்களுக்கு முன் வயலாக இருந்து ரப்பர் தோட்டமாக மாறிய பகுதியை சீர்திருத்தி, உழவு செய்து மீண்டும் வயல் பகுதியாக மாற்றி நெற் நடவு செய்துள்ளனர் நன்பர்கள். திருநந்திக்கரை பகுதியில் கூட்டாக தொழிற் நடத்தி வரும் நன்பர்கள் எடுத்திருக்கும் புது முயற்சிக்கு பாராட்டுகள் தெருவிப்பதோடு, வசதி இருப்பவர்கள் இது போன்ற முயற்சியை மேற்கொண்டு நெற் விவசாயத்தை மீண்டு எடுப்போம்...

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 3962