Marungoor


ஒரு குடும்பத்திற்கு உதவுவதற்காக மருங்கூர் சென்றோம். எங்களிடம் அந்த வீட்டம்மாவின் படமும் பெயரும் மட்டுமே இருந்தது. மருங்கூரில் தெருக்களில் விசாரித்து அலைந்து கண்டுபிடித்து அவர்களது வீட்டின் முன் நின்றோம்.

வீடு பூட்டியிருந்தது,என்றோ பத்தவைக்கப்பட்டட அடுப்பு அவர்களது வறுமையையின் குறியீடாக சாம்பலற்று கிடந்தது.

அருகாமையில் இருந்த வீடுகளில் இருந்த பெண்களிடம் அவர்களை பற்றி விசாரித்தோம்.

எங்க போயிருப்பாங்க தெரியுமா?

"யாருக்கு தெரியும்? எங்கையும் இரக்க போயிருப்பா...

பதிலை கேட்டு 'வெம்பி' போய் நின்றோம்.

எங்கோ ஒரு வீட்டில் அடுப்பில் குளம்பு கொதித்து அடிப்பிடிக்கிற வாசனை பரவிக் கொண்டிருந்தது.
------ ------ -------- ----- ------ ----

பின்னர் மாலையில் மீண்டும் அவர்களை தேடி சென்று ஒரு மாதத்திற்கான அரிசியும் பலசரக்கு சாமன்களையும் வழங்கி வந்தோம். இப்போது அவர்கள் வீட்டிலும் அடுப்பில் குளம்பு கொதிக்கும் வாசனை வரும் என்கிற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
-------- ------- ------ ----- ----- ----
உதவ கேட்டுக்கொண்டவர் Muthuraman
உதவ பணம் அனுப்பி தந்தவர்கள் கோட்டவிளை கலா சென்னையிலிருந்து.

நாங்கள் வெரும் 'கருவிகளே'

Courtesy: Jawahar Clicks


Other Pages