Places & Locations

"கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊர்களும் அவற்றின் வழங்கு சொற்களும்" கற்றுக் கொள்வோம் வாருங்கள் !

கன்னியாகுமரி - கன்னியாமறி, கன்னியாரி

நாகர்கோவில் - நாரல், நாரோல் , நாரியலு

திருவெண்பரிசாரம் - த்ருப்சாரம் , திருப்பேசாரம்

கோதைகிராமம் - கோச்சப்பிளாரம்

அழகியபாண்டியபுரம் - அழயாண்ட்ரம்

பூதப்பாண்டி - புப்பாண்டி , புவப்பாண்டி

இறச்சகுளம் - எறச்சோளம்

பன்றிக்குழி - பண்ணுளி

பார்வதிபுரம் - பாரேயொரம் , பாரியுரம்

சுங்கான்கடை - சுங்கியாங்கட

குமாரகோவில் - குமாரோல்

மார்த்தாண்டம் - தொடுவட்டி

கருங்கல் - கருங்க

தெரிசனங்கோப்பு - தெர்ஸ்னோப்பு

குளச்சல் - கொளச்ச

குலசேகரம் - கொல்சேரம்

தக்கலை - தக்கலெ

வில்லுக்குறி - வில்லுவுரி

திங்கள்சந்தை - திங்களாந்த

கோட்டார் - க்வாட்டாரு

கணேசபுரம் - க்ணேசொரம்

செட்டிகுளம் - செட்டியொளம்

புதுக்குடியிருப்பு - பூடீர்ப்பு

திருவட்டார்- த்ரூட்டாரு

இரணியல் - எரணீலு

அழகப்பபுரம் - அழப்பொரம்

சுசீந்திரம் - சுயிந்ரம்

குசவன்குழி - கொசங்குழி

மேலராமன்புதூர் - மேல்ராம்பூரு

கீழராமன்புதூர் - கீழ்ராம்பூரு

ராமனாதிச்சன்புதூர் - ராமச்சம்பூரு

செண்பகராமன்புதூர் - செம்பராம்பூரு

ஆரல்வாய்மொழி - ஆராமுளி

தாமரைக்குளம் – தாமரொளம்

பத்மநாபபுரம் - பப்பநாரம்

( கவனமாகப் படிக்கவும் )

ஊரம்பு – ஊர்ம்பு

ஒழுகினசேரி - ஒழ்நேரி

பூலான்குழி - பூலாங்குழி

புன்னைக்காட்டுவிளை - புன்னாட்டுவௌ

இராஜாக்கமங்கலம்- ராசாக்கமலம்

குன்னுவிளை - குன்னேள

சுண்டப்பற்றிவிளை – சுண்டாட்டிவௌ

அடையாமடை – அடயாமட

கொட்டகம் - கோட்டவம்

புலவர்களின் பரிந்துரை

வடசேரி - வட்செரி

கிருஷ்ணன்கோவில் - கிறிஸ்னெங்க்கோயலு

மண்டைக்காடு - மண்டாடு

திற்பரப்பு - திப்புருப்பு ( புலவர். கீர்த்தி )

ஆரல்வாய்மொழி - ஆராம்ழி ( புலவர். Sundar John )

திருகண்ணன்கோடு - திக்கணங்கோடு (புலவர்.Allen Smith R )

பெரும் செல்வ விளை - பெருஞ்ச விளை, பொறிஞ்சவெள ( புலவர். Lazar Joseph )

கருங்கல் - கருங்கன்னும் சொல்லுவினும் கரிங்கன்னும் சொல்லுவினும் ( புலவர். அருட்தந்தை. Moses Manohar )

கற்காடு - கக்காடு

செண்பகராமன் புதூர் -செம்ப்ராம்புதூர், செம்ப்ராபூறு (புலவர். Gladys Stephen )

ஒழுகினசேரி - ஒல்னேசேரி ( புலவர். Krishna Pillai V )

இரவிபுதூர்கடை - எருதூர்க்கட ( புலவர். எல்ஜின் குமார் )

மடவிளாகம் - மடலாகம்

இரவிபுதூர் - எலியூர்

கடம்படிவிளாகம் - கடம்பாளாம் ( புலவர். Manuel Selvan )

பாடம் முடிந்தது. குமரி மாவட்டப் புலவர்கள் வேறு ஊர்களின் பெயர்களை பரிந்துரைக்கலாம்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. உதாரணமாக மாத்தூரில் தொட்டிப்பாலம், சுசீந்திரத்தில் கோயில் தேர், ஆரல்வாய்மொழியில் காற்றாலை, தேங்காய்பட்டணத்தில் தென்னை,கோட்டாறில் ரெயில் நிலையம், மார்த்தாண்டத்தில் பிரமாண்ட பாலம், திற்பரப்பில் அருவி, பேச்சிப்பாறையில் அணைக்கட்டு, குளச்சலில் மீன் பிடித்தொழில்,பத்மனாப புரத்தில் அரண்மனை, தோவாளையில் பூ என சொல்லிக்கொண்டே போகலாம். 

சில ஊர்களின் பெயர்களை நண்பர் Subash Ets அந்தந்த ஊரின் சிறப்புகளைக்கொண்டு சிறு குறியீடுகளுடன் ஆங்கிலத்தில் வடிவமைத்துள்ளார். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. நண்பரின் படைப்பாற்றலுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள் சுபாஷ்!!

Courtesy: திருவட்டாறு சிந்துகுமார்


Other Pages