கன்னியாகுமரிக்கு லீவு - 16.08.2018

தொடர் மழைக் காரணமாக நாளை கன்னியாகுமரிக்கு லீவு!

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய, விடிய மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 23 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நேற்றுமுன்தினம் நிரம்பியது. முதற்கட்டமாக அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நாளை 16.08.2018 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரசாந் மு வடநரே உத்தரவிட்டுள்ளார்.



Kanyakumarians Posted by Kanyakumarians


views: 1485