மீட்பு பணியில் நேரடியாக களம் இறங்கிய...


கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை கொட்டி வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணை நிரம்பி வழிகிறது. உபரி நீராக 30000 கன அடிக்கு மேலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பளுகல், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ள நீர் சூழப்பட்டுள்ளது. இதனை அறிந்த பத்மநாபபுரம் சப் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா கொட்டும் மழையில் இடுப்பளவு தண்ணீரில் நீந்தி சென்று மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்.

மீட்பு பணிகளில் பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்பார்வை இடுதல் மற்றும் கீழ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவர். ஆனால் பத்மநாபபுரம் சப் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா (IAS) நேரடியாக களம் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுப்பட்டது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்தது. அந்த இளம் அதிகாரியின் செயல் சமூக வலைதளங்களில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Kanyakumarians Posted by Kanyakumarians


views: 1576