
குமரி மாவட்டம், நாகர்கோவில் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் கல்வி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், இதற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, எஸ்.டி. இந்து கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் கல்லூரி, அரசு கலை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் இந்த போராட்டம் நடைபெற்றது.
views: 2064


Posted by







