Penguin - Keerthy Suresh
பென்குயின்
யாராவது கீர்த்தி சுரேஷின் அற்புதமான நடிப்பு செம த்ரில்லர்னு சொன்னா வாய்ல மட்டும் சிரிக்காதிங்க........
மிக மொக்கையான காட்சி வடிவமைப்பு மிக மொக்கையான கதாபாத்திர வடிவமைப்பில் வந்த ஒரு திரில்லர் படம் என்றால் தவறாமல் சுட்டலாம் இந்த படத்தை........
மகனை காணாமல் காட்டில் கிடக்கும் ஆதாரங்களை கீர்த்தி சுரேஷ் பார்க்கும் ஒரு காட்சி இருக்கும் அது ஒன்று போதும் காட்சியமைப்பும் கேமராவும் நடிப்பும் இவ்ளோ அமைச்சூர் தனமா இருக்குன்னு.......
சமீப காலமா அனைத்து மொழிகளிலும் திரில்லர் ஜானரை அடித்து துவைத்து காயப்போட்டு கொண்டிருக்கிறார்கள் அதில் இது அல்டிமேட். இனி எவனாவது த்ரில்லர் ஜானர் பாப்பீங்க.....?
அடேய் டைரக்டருங்களா இந்த டாக்டர்கள்ளாம் உங்களுக்கு என்ன பாவம்டா பன்னாங்க.....?
கீர்த்தியின் இரண்டாவது கணவர் அவருக்கு ப்ரோப்போஸ் பன்னும் ஒரு நிமிட காட்சி மட்டும் தான் நூத்தி நுப்பத்தி இரண்டு நிமிட காட்சியில் வொர்த்தான காட்சி.....
லிங்கா இதுவரை வந்து போன படங்களில் கூட செமையா பெர்பாம் பன்னியிருப்பார் இதில் ஏனோதானோவுனு வந்து போறார்.....
கம்பாரிசன் பன்னாதிங்கடானு சொல்றத ஒரு டிவிட் ,பதிவு, ஒரு குறும்படம் இப்படி முடிங்கடா அதுக்கு ஒரு படம் அதுலயும் த்ரில்லர் படம் எடுத்து குழுந்தைகளுக்கு பிடிச்ச சார்லி சாப்ளின ஏண்டா நாஸ்தி பண்ணி வச்சிருக்கீங்க.......?
Courtesy: குமரிக் கிழவனார்
1 | 1k views