For Advertising... Please Contact - 9940542560

கொரோனாவின் கோர தாக்கத்தை இன்று உணர்ந்தேன்....

     |   
கொரோனா நோய் தொற்றால் முழு ஊரடங்கு காலத்தில் தனது வறுமையின் காரணமாக மூன்று பெண் குழந்தைகளின் தாய் ஒருவர் சாலை ஓரம் டீ வியாபாரம் செய்வது குறித்து புகைப்படம் வெளியிட்டிருந்தேன்.....
எனது பதிவை பார்த்து சென்னை பத்திரிகையாளர் மன்ற செயலாளர் மரியாதைக்குரிய பாரதி தமிழன் அவர்கள் எனது Google pay மூலம் 5000 ரூபாய் அனுப்பி வைத்து அந்த பெண்ணிடம் இந்த பணத்தை உடனடியாக கொண்டு சேர்க்குமாறு கூறினார்.....
அதன்படி நானும் எனது நண்பர் ஐயப்பன் அவர்களும் பல மணி நேரம் அவரை நாகர்கோவில் முழுவதும் தேடினோம் ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை....
கன்னியாகுமரி இயற்கை அழகு முகநூல் வழியாக அவர்கள் தொடர்பு கிடைத்தது பாரதி தமிழன் சார் சொன்னது போல் அந்த பணத்தை அவரிடம் கொண்டு சேர்த்தோம்...
அவரது தொடர்பு எண்ணை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளேன் அவருக்கு தேவையான உதவிகள் அவரை வந்து சேரும்.....
மூன்று பெண் குழந்தைகளுடன்வறுமையில் வாடுவதாக அவர் என்னிடம் தெரிவித்தார் இறைவன் இந்த சகோதரிக்கு தேவையான அனைத்து நல்ல விஷயங்களும் செய்வார் என்று நம்புகிறேன்.......

-Jackson Herby


     |   

Other Pages