பெட்ரோல், டீசல் விலை உயர்வும் பாரத் பந்தும்....


சாதாரண மக்கள் கூட நேரடியாக பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது பெரும்பான்மை மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் கண்டபடி விதிக்கப் பட்டிருக்கும் வரியை சற்று குறைத்தாலே மக்களுக்கு ஆறுதலான சூழல் ஏற்பட்டிருக்கும். நாட்டின் வளர்ச்சி பணிகள், காலத்திற்கு ஏற்ற விலைவாசி உயர்வு என பலதரப்பட்ட நியாயங்கள் முன்வைத்தாலும், கச்சா எண்ணையின் விலையை ஒப்பிடும் போது தற்போதைய விலை நியாயப்படுத்த முடியாத உயர்வில் உள்ளதாகவே சாதாரண மக்கள் உணருகின்றனர்.

இந்த சூழலில் விலை உயர்வு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாரத் பந்தை நடத்தியது. ஆனால் மக்களின் மன குமுறல்களை முழுமையாக பந்த் மூலமாக வெளிப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. நிர்பந்தத்தின் மூலம் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டது. ஆனால் வாகன போக்குவரத்து..? ஏன் இப்படி .. இன்றைய சூழலில் மக்கள் ஒரு நாள் வேலையை கூட முடக்க முடியாத சூழலில் உள்ளனர். கோரிக்கை எதுவாக இருந்தாலும் வேலை நிறுத்த போராட்டத்தை ஏற்க மக்கள் தயாராக இல்லை. ஆளும் கட்சியினரின் கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கவும், எதிர்ப்பை தெரியப்படுத்தவும் எதிர்கட்சிகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. அதை பயன்படுத்தாமல் மக்களுடன் இணைந்து பாரத் பந்த் நடத்தியது அரசிற்கு எந்தவிதத்தில் தாக்கத்தை கொடுத்திருக்கும்....

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 3766
   

Leave a Comment

Note: HTML is not translated!