ஔவையார் அம்மன் கோவில் சானலில்..


நான் மூன்று மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்திருந்தபோது நம் தமிழ் பாட்டி ஔவையாருக்காக கட்டப்பட்ட (உலகத்திலேயே ஔவையாருக்கென்று நிறுவப்பட்ட ஒரே கோவில் இதுதான் என நினைக்கிறேன்) ஔவையாரம்மன் கோவிலைப்பற்றி 
கட்டுரையெழுதும் நோக்கத்துடன், கோவிலை ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுக்க தாழக்குடி போயிருந்தேன். அப்போது தோவாளை கால்வாய் நீர்பாசனத்திற்காக திறந்து விடப்பட்டிருந்தது. அதில் வழி நெடுகிலும் மக்கள் குதூகலத்துடன் குதித்து, குட்டிக்கரணம் அடித்து விளையாடி க்கொண்டிருந்ததைப்பார்த்ததும் எனக்கு என் பள்ளிப்பருவத்தில் ஒழுகினசேரி ஆற்றிலும், புத்தேரி குளத்திலும் நீச்சலடித்து குளித்த ஞாபகம் வந்தது. நம் குமரி வழக்கு மொழியில் கூறப்போனால் "சானலில் சாடி தண்ணிய கலக்கணும் போல 
தோணிச்சி " அப்போது மழை பெய்து கொண்டிருந்ததாலும், மாற்றுத்துணி கொண்டு போகாததாலும் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.


குமரிமாவட்டத்தில் எங்கும் ஆறு-குளங்கள் நிறைய இருந்ததால், இங்கே நீந்தத்தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை என்பது என் கணிப்பு. சரிதானே?)


views: 10386
   

Leave a Comment

Note: HTML is not translated!

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs