"லே" என்பது மரியாதை குறைவான வார்த்தை... அது தவறு..


பலரும் "லே" என்பது மரியாதை குறைவான வார்த்தை என கருதுகின்றனர்... அது தவறு..

"லே" என்ற சொல் அன்பாகவும் வெளிப்படும் கோபமாகவும் வெளிப்படும் அது சூழ்நிலை பொறுத்து மாறுபடும்..

"லே" என்னும் ஒரு சொல் தான் ஆனால் அதில் பல அர்த்தங்கள் உள்ளன அதை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சரியாக பயன்படுத்துவார்கள்...

"லே மக்கா" என அன்பாக வெளிப்படும் வார்த்தை "எலே எவம்ல அது" என கோபமாகவும் வெளிப்படும்...

எங்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றவர்களை மதிக்கும் குணம் கொண்டவர்கள்.. முகம் தெரியாத நபருக்கு கூட மதிப்பு கொடுத்து அழைக்கும் குணம் எங்கள் ஊர் மக்களுக்கு மட்டுமே கொடுத்து வைத்த வரம்....

இக்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மொழியை பேசினால் மதிப்பில்லை என கருதி ஆங்கிலத்தில் பேசும் மக்கள் மத்தியில் இலக்கியத்தில் உள்ள "லே" என்ற தமிழ் சொல்லை எங்களின் அடையாளமாக கொண்டிருப்பது எங்களுக்கு பெருமையே....!!!

Kanyakumarians Posted by Kanyakumarians


views: 8129
   2

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs