For Advertising... Please Contact - 9940542560

Colachel Pillar & War Memorial

Colachel  |      1  |   

278 ஆண்டுகளுக்கு முன் பெற்ற வரலாற்று வெற்றி....


Photo By Anantha Subramonian

1741 ம் ஆண்டு நடந்த குளச்சல் போரும், அதில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்ம பெற்ற வெற்றியும் உலக நாடுகளை வியப்பிற்குள்ளாக்கிய வரலாற்று நிகழ்வு. போர் வலிமை படைத்த டெச்சு படையினரை தோற்கடித்த திருவிதாங்கூர் படை மன்னரின் புகழை உலகறிய செய்தது.

டச்சு படையை எதிர்கொள்ள தகுதியான ஆயுதங்கள் இல்லாததால் பனைமரம் வெட்டி வைத்து பீரங்கி தோற்றத்தை ஏற்படுத்தி ஒரு வித பயமுறுத்தல் மூலமாக திருவிதாங்கூர் படை வெற்றி பெற்றதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் கடல் மார்க்கமாக குளச்சலில் தரையிறங்கி சிறிய கோட்டை கட்டி முகாமிட்டிருந்த டச்சு படை மீது திருவிதாங்கூர் நாட்டு படை வீரர்கள் பயங்கர போர் நடத்தி தான் வெற்றி பெற்றனர் என்ற தகவலும் உள்ளது.


Photo By Anantha Subramonian

ஐரோப்பியா படையிலிருந்து விலகிய 24 வீரர்களை கொண்டு மார்த்தாண்டவர்ம தனது படையை ராணுவ கட்டமைப்பிற்கு உருவாக்கியிருந்திருக்கிறார். வணிக ஆதாயம் பெற்று ஆங்கிலேயர்கள் வழங்கிய வெடிமருந்து, பீரங்கிகள், துப்பாக்கிகள் மற்றும் தளவாடங்கள் திருவிதாங்கூர் படையை வலிமை சேர்த்திருக்கிறது.

இந்த வரலாற்று வெற்றியை நினைவூட்டும் விதமாக குளச்சலில் மார்த்தாண்டவர்ம அரசு முத்திரையுடன் வெற்றி தூண் ஒன்றை நிறுவினார். நாளை வெற்றி தூணிற்கு ராணுவ மரியாதை வழங்கப்படுகிறது. நம் முன்னோர்கள் பெற்ற வரலாற்று வெற்றியில் பெருமை கொள்வோம்.

Credits: Jaya Mohan Thirparappu


Photo By Anantha Subramonian

   1  |   

Other Pages