For Advertising... Please Contact - 9940542560

Dr K Sivan - Chandrayaan 2

     |   

அனைத்து துறைகளிலும் வேண்டும் சிவன்....


திற்பரப்பிற்கும் கடையாலுக்கும் இடையே ஓடுகிற கோதையாற்றை கடக்க, மூங்கில்களால் உருவாக்கப்பட்ட தெற்பத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தெற்பத்திலான பயணம் வெள்ளப் பெருக்கு காலங்களில் சிரமத்தை கொடுப்பதோடு ஆபத்தும் கூட. காலத்தின் மாற்றத்திற்கேற்ப போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என எண்ணிய எம்.எல்.எக்கள் லீமாறோல், ஜாண்ஜோசப், எம்.பி பல்லார்மின் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியி ஒதுக்கி தெற்பகடவில் பாலம் கட்ட முடிவு செய்தனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதிப்பீடு தயார் செய்து , அரசின் பொது நிதியும் சேர்த்து இரும்பு பாலம் கட்ட முடிவு செய்தனர். அதற்காக டிசைன் உருவாக்கி பணிகள் துவங்கினர். வேகமாக துவங்கிய பணிகள் தடைகள் பல கடந்து 2010 அக்டோபர் மாதம் இறுதி கட்டத்தை நெருங்கியது. ஆனால் அதிகாரிகளின் அனுபவமின்மை, இரும்பு பாகங்கள் பொருத்தியதில் ஏற்பட்ட பிழை காரணமாக பாலம் இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொருத்திய சில பாகங்களை கழட்டிபோட்ட பின் பணியாளர்கள் தீபாவளி விடுமுைறைக்கு சென்றனர்.

மழைக்காலம் ஆரம்பித்தது. வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாலத்திற்க்காக பணியாளர்கள் பொருத்தி வைக்கப்பட்ட பகுதிகள் வெள்ளப் பெருக்கில் வீழ்ந்தது. பாலப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்த செய்திக்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை தொடர்பு கொண்டு, அவர் விளக்கத்தை கேட்டேன். " மனிதன் செய்கிற பணிகளில் தவறுவருவது இயல்பு. இங்கேயும் அது தான் நடந்திருக்கிறது." என அதிகாரி பதில் கூறினார். பல அடுக்கு அதிகாரிகளின் கண்காணிப்பில் நடந்த பணியில் ஏற்பட்ட பிழைக்கு பொறுப்பு அதிகாரியின் பொறுப்பற்ற பதில் . அலட்சியம் காரணமாக அரசின் பலலட்சங்களை வீணாக்கிய அதிகாரியின் அலட்சியமான பதில்.
ஒன்பது ஆண்டுகளாகியும் அன்றைய நிலையிலே நிற்கிறது பாலப்பணி. தற்போது இந்த விஷயங்கள் எதற்காக?.

இங்கே தான் இஸ்ரோ தலைவர் சிவன், எம்பெருமான் சிவன் நிலைக்கு உயர்ந்தவராகிறார். தனது தலைமையில் செய்த திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதற்காக, கண்ணீர் விட்டு அழுகிறார். தனது பொறுப்பை உணர்ந்த அரசு பணியாளர்.

தனது பொறுப்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் முழுமையாக நாட்டிற்கு பயன்பெற வேண்டும் என ஆத்மார்த்தமாக எண்ணும் எத்தனை அரசு பணியாளர்களை இன்று காணமுடிகிறது?. தனது வருவாய் உயர்விற்காக மட்டுமே பணியாற்றும் பெரும்பான்மையான அரசு பணியாளர்கள் மத்தியில் தங்கள் பொறுப்பை உணர்ந்து , தனது பணிகள் தாய் நாட்டிற்கு முழுமையாக பயன் பெறவேண்டும் என்ற உணர்வோடு பணியாற்றும் அரசு பணியாளர்கள் அனைவரும் சிவ பெருமான்களே..!!

Courtesy: Jaya Mohan Thirpparappu

     |