World Photography Day Contest - Nellai
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக புகைப்பட தினப் போட்டி...
உலக புகைப்பட தினம் ஆகஸ்டு 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் பரணி வரலாற்று மையமும் இணைந்து ஒரு புகைப்படப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போட்டியின் தலைப்பு: திருநெல்வேலியின் பழமையான வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்கள். நெல்லை மாவட்டத்தில் ஏராளமான வரலாற்று சின்னங்கள் உள்ளன. அச்சின்னங்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வைக்கும் ஒரு வாய்ப்பாக இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் நெல்லை மாவட்டத்தின் பழமையினையும், பெருமையினையும் உணர்த்தும் பழங்கால கோயில்கள், தொன்மையான கட்டிடங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், போன்ற வரலாற்று சின்னங்களின் புகைப்படங்களை அனுப்பலாம். இப்போட்டியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். ஒருவர் 5 புகைப்படங்கள் வரை அனுப்பலாம். புகைப்படங்கள் 18.08.2020 மாலை 5 மணி முன்பாக நெல்லை அருங்காட்சியக மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: govt.museumtvl@gmail.com. அத்துடன் தாங்கள் அனுப்பும் புகைப்படங்களின் விபரம், தங்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் அனுப்பவும். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்த இடங்களை அடையாளம் காட்டும் விதமாக எடுக்கப்படும் 10 புகைப்படங்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு. மேலும் விபரங்களுக்கு 9444973246 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என்கிற தகவலை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி அவர்கள் தெரிவித்தார்.
Courtesy: Government museum, Thirunelveli
1 | 838 views