Tenkasi

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 506 பேரில் இதுவரை 324 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் இன்று மட்டும்  57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் சென்னை, ஒருவர் மகாராஷ்டிரா, ஒருவர் குஜராத், ஒருவர் கர்நாடகா, ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் வந்தவர்கள்.

காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருந்தவர்களை பரிசோதனை செய்யபட்டதில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆலங்குளத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், ஓடைமரிச்சான் கிராமத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் அனைவரும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களாவர்.

இவர்கள் தென்காசி, ஆலங்குளம், இலஞ்சி, சீவநல்லூர், விஸ்வநாதபுரம், ஊத்துமலை, புளியங்குடி, சுரண்டை, கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில், சேர்ந்தமரம், சிவகிரி, கீழப்பாவூர், வடகரை, சிவலார்குளம் பகுதிகளைச் சேர்நதவர்கள்.

ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஆலங்குளத்தில் அடக்கம் செய்தனர். அவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



Showing 1 to 6 of 6 (1 Pages)

Other Pages