பினராய் அல்ல பிணறாயி என்பதே சரி!


கேரள மாநில முதல்வரின் பெயர் விஜயன். அவர் பிறந்தது கண்ணூர் மாவட்டத்தில் (பழைய மலபார்) உள்ள பிணறாயி என்ற ஊரில். இதனால் பிணறாயி விஜயன் என்றழைக்கப்படுகிறார். இதோ படத்தில் காணும் பெயர் பலகையில் கூட மூன்று சுழி ண பயன்படுத்தியே மலையாளத்தில் ஊர் பெயரைக்குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தமிழ்ப்பத்திரிகைகளிலும், டிவியிலும் “பினராய்” விஜயன் என்ற உச்சரிப்புடன் முதல்வர் குறிப்பிடப்படுகிறார்.

அய்யா தமிழ் மீடியாக்களே நீங்கள் ஊர்பெயரைச் சிதைத்து டிவியில் செய்தி வாசிக்கும் போது மலையாள மீடியா நண்பர்கள்,”எந்தா சாரே, நிங்ஙளுடே நாட்டில் உள்ளோர்க்கு ஸ்தலத்தின்றே பெயர் சரியாயிட்டு பறயான் அறிஞ்ஞூடே!” என கேட்கும்போது வெட்கித்தலை குனிகிறேன்.

எனது நட்பு வட்டத்தில் உள்ள மீடியா நண்பர்கள், அவர்கள் பணியாற்றும் மீடியாக்களின் தலைமைக்கு இந்த தகவலை கொண்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 2239