
இயற்கையோடு ஒன்றித்து வாழும் வாழ்கை இங்கு சிலருக்குதான் கிடைக்கும் அந்த வகையில் நம் பகுதியில் காணி இன மலைவாழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் என சொல்ல வேண்டும்.1980 களில் நம் கிராமத்து வாழ்க்கையும் இப்படி தான் இருந்தது,ஓலை வீடு,சாணி மொழுகிய தரை,வாழை இலை சாப்பாடு,என இன்றைய நகர மக்கள் நினைத்து பார்க்க முடியாத ஒரு அழகிய பொற்கால வாழ்க்கை அது! இந்த காலகட்டத்திலும் அப்படி ஒரு இயற்கையோடு இணைந்த வாழ்கையை இந்த காணி மக்கள் வாழ்வது ஒரு அதிசயமே அவர்கள் இல்லத்தில் ஒரு வேளை உணவு உண்டதும் எனக்கு கிடைத்த பாக்கியமே!

views: 7699


Posted by