ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்.....


இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவு யாருக்கும், எந்நாளிலும் ஏற்படலாம். இயற்கையின் அமைப்பை சிதைத்து சுகபோக வாழ்கை வாழ நினைத்தால் அழிவின் அளவு அதிகமாகும். கேரளா தற்போது எதிர்கொண்ட அழிவு மிகப் பெரியது. அனைத்தும் தொலைந்த சகோதரர்கள் துயரத்தில் துடித்த போது ஓடோடி வந்து உதவியவர்கள் பலர். ஜாதி, மத, மொழி, இன, அரசியல் பாகுபாடின்றி மக்கள் உதவி வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து உணவு, உடை, மருந்து என உதவி பொருட்கள் கேரளா நோக்கி பாய்கிறது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சாதாரண மக்கள் இதுவரை 309 கோடி வழங்கியுள்ளனர். ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி என்ற அளவில் பண உதவி வருகிறதாம். எட்டு நாட்களில் 2 லட்சத்து 62 ஆயிரம் மக்கள் பணமாக உதவி செய்துள்ளனர். மத்திய அரசு, மாநில அரசுகள் மட்டுமல்ல வெளி நாடுகள் கூட கேரளா அரசுக்கு உதவி வருகிறது. மீட்பு பணிகளில் பல்வேறு அமைப்பினர், தனிமனிதர்கள் மேற்கொள்ளும் சேவை மிகுந்த பாராட்டிற்கு உரியது. இத்தனையும் சீராக நடக்கும் வேளையில் சில பேர் அரசியல் உள்நோக்கத்தோடும், விமர்சன பார்வையோடும் சில கருத்துக்கள் வெளியிடுவதை பொருட்படுத்தாமல் கேரளா அரசோடும் , கேரளா மக்களோடும் இணைந்து சேவை செய்யும் அனைவரும் ஆபத்பாந்தவர்களே..

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 3052