மானங்கெட்டவர்கள் சூழ் உலகு

கோமாதாவான மாட்டுக்கறியைத் தின்றதால் சாமி கேரள தேசத்தை அழித்துக் கொண்டிருப்பதாகவும், விக்கிரக வழிபாட்டு முறையினால்தான் கடவுள் கேரளாவைக் குறி வைத்துப் புரட்டுவதாகவும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராத சாபத்தால்தான் கேரளா தலைக்குக் குளிக்கிறது என்றும் கொஞ்சம் முட்டாள்கள் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.

இது என்ன மாதிரியான சிந்தனை கோமாளிப்பயல்களே ! உங்களுக்கு மழையும் , வெயிலும்தாம் கடவுளர் என்றால் அறிவியலும் , இயற்கையும்தான் என்ன ? மண்டையில் உங்களுக்கெல்லாம் மலமா இருக்கிறது? அப்படிப் பார்த்தால் பூமித்தாயின் மடியில் பூக்கும் தாவரங்களை உண்ணும் உங்களைத்தான் கடவுள் முதலில் போட்டுத் தள்ளியிருப்பார்.

மழை பெய்யாவிட்டால் கழுதைக்குக் கல்யாணம் செய்து வைக்கும் கொம்மண்டைப்பயல்களுக்கு அறிவியல் குறித்த அறிவு இருக்குமா என்ன ?

மழை பெய்தால் ' என்ன எழவு மழை ? ஒரு வேலையும் செய்ய விட மாட்டேங்குது ? என்று சலித்துக் கொள்வார்கள். பெய்யாவிட்டால் சடங்குகளும், பொங்கல் வைப்பும், கூட்டுப் பிராத்தனைகளும் அனல் பறக்கும். கடவுளுக்கே உங்கள் செயல்கள் அலுத்துப் போயிருக்கும்.

மரங்களை வெட்டி, வீட்டுக்குக் கதவு, ஜன்னல்கள் செய்து, மாட்டி விட்டுவிட்டு ஆக்சிஜனைத் தடை செய்வீர்கள், குளிர்சாதனப் பெட்டியும், குளிரூட்டியும் 
வைத்து CFC வாயுவை உற்பத்தி செய்து ஓசோனில் ஓட்டை போடுவீர்கள். புவியை அசுத்தப் படுத்துவீர்கள். பழி பாவப்பட்ட கடவுளுக்கா ?

புவியைக்கீறி மீத்தேன், மயிறு, மண்ணாங்கட்டி எல்லாம் எடுத்துக் கொண்டு திரிகிறது இந்த கோமாளி அரசாங்கம். ஒரு இயற்கைப் பேரிடரைச் சரியாகக் கையாளாமல் ஒகிப் புயலில் எங்கள் மக்களை வதைக்கும் போது எந்த மாநிலமும் எங்களுக்காகப் பரிந்து பேசவில்லை. மாறாக, ஓய்வூதியம் பெறும் கொஞ்சம் வயதான முதியவர்களை, புயல் சேதத்தைக் கணக்கெடுக்க அனுப்பி வைத்து விட்டு வேடிக்கை பார்த்தது. பாவம்! கணக்கெடுக்க வந்தவர்களால் ஒரு செங்கல் மீது கூட ஏற முடியவில்லை... மலை மீது எப்படி ஏறுவார்கள் ?

ஒரு அண்டை மாநிலத்துக்காரன் அரசியல் ரீதியாக அதிகமாக ஆசைப்பட்டான் என்பதைத் தர்க்க ரீதியாக பேச வேண்டிய நேரமா இது ? உதவி கேட்பவன் எதிரியோ , துரோகியோ ? உதவ வேண்டியது நம் கடமையல்லவா ? உதவா விட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாதீர்கள். உங்கள் கருத்துக் குப்பைகளைக் கொண்டு போய் கடலில் போட்டு விட்டு , நீங்களும் மூழ்கி விடுங்கள்.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி வீடியோக்களை கேரளா வெள்ளக் காட்சிகள் என்று பகிர்வது , இதுதான் சாக்கு என்று , லாரிகளில் 'வெள்ள நிவாரண நிதி' என்று எழுதி ஒட்டிவிட்டு, கேரளாவுக்கு அரிசி கடத்துவது போன்ற போக்கிரித் தனமான காரியங்கள் எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே ? இது நியாயமா ?

கவனமாக செயல்படுங்கள் மனிதர்களே ! ஒரு சின்ன வெள்ளத்திற்கே நடுங்கிப் போனோம். Safety Zone ல் உட்கார்ந்து கொண்டு எகத்தாளம் செய்வது எளிது. மேடுகளில் வெள்ளம் வராமல் போகலாம்! ஆனால் நிலநடுக்கம் வரும் ! ஜாக்கிரதை !

Prabhu Dharmaraj Posted by Prabhu Dharmaraj

Photographer & Writer

views: 3192
   

Leave a Comment

Note: HTML is not translated!

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs