திருவட்டார் நரசிம்மர் திருக்கோயில்....


புகழ் பெற்ற திருவட்டார் ஆதிகேசவ திருக்கோயில் வெளிப்புறத்தில் தென்கிழக்கு மூலை அமைந்துள்ளது பழமையான நரசிம்மர் மடம்.
திருச்சூர் நடுவல் மடத்தின் கட்டுபாட்டில் பரளியாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள மடத்திலுள்ள நரசிம்மர் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
ஆதி சங்கரர் அருளால் ஆதிகேசவ திருக்கோயிலின் புஷ்பாஞ்சலி சாமியாராக தேர்வு செய்யும் சாமியார் நரசிம்மர் மடத்திற்கு அதிபதியாக இருந்தனர்.
தேரூர், தெரிசனம்கோப்பு, ஞாவல்காடு, அனந்தபுரம் பகுதிகளில் நரசிம்மர் மடத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருந்தன.
பூதேவி, ஸ்ரீதேவி சமேதனாக நரசிம்ம மூர்த்தியும், அதன் கீழ் பகுதியில் தியான நிலையிலான நரசிம்மரும் இக்கோயிலில் பிரதிஷ்டையாக உள்ளது. வேலுடன் சுப்ரமண்ணியரும் அருகில் காட்சி தருகிறார். 
தேவாரக்கெட்டின் வெளிப்பகுதியில் பகவதி சன்னதியும், சற்று தொலைவில் யக்ஷி தறயுடன் கூடிய காவும், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த சமாதிகளும் உள்ளன.
புஷ்பாஞ்சலி சாமியார் தங்குவதற்கான மாளிகை கோயிலின் அருகே பழமையுடன் இன்றும் காட்சியளிக்கிறிது. 
இன்றும் சிறப்பாக பூஜைகள் நடந்துவரும் நரசிம்மர் கோயில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் புண்ணிய தலமாகவே விளங்குகிறது.

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 4059
   

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs