நாகர்கோவில் - வேப்பமூடு ஜங்ஷனும், அண்டிப்பருப்பும்!


நாகர்கோவிலுக்கு வங்கி வேலை தொடர்பாக பெங்களூருவிலிருந்து வந்திருந்தார் கஸ்தூரி அக்கா..

நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் தாண்டும்போது வழக்கம் போல் பூங்கா முன்பு முந்திருப்பருப்பு வறுத்துவிற்கும் நபர்கள் இருப்பதைப்பார்த்து,
”நாகர்கோவில்ல எல்லாமே மாறிடுச்சு..மாறாம நடக்கும் ஒரே பிஸினஸ் அண்டிப்பருப்பு (முந்திரிப்பருப்பு) மட்டும்தான்!” என்றார்.

அப்போதுதான் நான் கவனித்தேன். அவர் சொல்வது உண்மைதான். நாகர்கோவில் பூங்கா முன்பு வியாபாரிகள் வாணெலியை வைத்து முந்திரிக்கொட்டையை சுடச்சுட வறுத்து, 
உடைத்து பருப்பை எடை போட்டு தருவார்கள். மக்கள் விரும்பி வாங்கி சுவைத்துச்செல்வார்கள். முன்பு எப்படி நடந்ததோ அப்படியே இப்போதும் இந்தத் தொழில் பூங்கா முன்பு தொடர்கிறது.

இப்போது கண் முன்னே வறுப்பது கிடையாது. அவர்கள் வீட்டில் வைத்து முந்திரிகொட்டையை வறுத்து, உடைத்து இங்கே கொண்டு வந்து மேல் தோல் எடுத்து விற்பனை செய்கிறார்கள். 
பூங்காவுக்குச்செல்பவர்களும் முந்திரிப்பருப்பை வாங்கிச்சென்று , கதைபேசி பொழுது போக்குவார்கள்.

இப்போது நூறு கிராம் நூறு ரூபாய் விலையில் விற்கிறார்கள். மணத்துடன் ஃபிரெஷ்ஷாக கிடைக்கும் அண்டிப்பருப்பின் சுவை உண்மையிலேயே அலாதியானது. 
அடுத்த தடவை நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பார்க் பக்கம் வந்தீங்கன்னா, மறக்காம அண்டிப்பருப்பு வாங்கி அவுச் அவுச்சுன்னு சாப்பிடுங்க மக்கா! :-)

பின் குறிப்பு : அளவுக்கு மேல் சாப்பிட்டால் சுற்றுச்சூழல் மாசுபட வாய்ப்பு உண்டு ;-) ?!

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 8392
   1

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs