புகழ்பெற்ற கட்டபொம்மன் வசனம் குமரி மேற்கு மாவட்ட தமிழில்!!!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழை எல்லோராலும் புரிஞ்சுக்க முடியும். ஆனால் கேரள எல்லையையொட்டியுள்ள குமரி மேற்குமாவட்ட தமிழை மத்தவங்க புரிஞ்சுக்கிறது கொஞ்சம் சிரமம்தான். மேற்கு மாவட்டத்தவர் வட்டார வழக்கை கிழக்கு மாவட்டத்தவர்கள் கிண்டல் பண்ணுவது கூட உண்டு. 

புகழ்பெற்ற கட்டபொம்மன் வசனத்தை குமரி மேற்குமாவட்ட ஸ்டைலில், Ratheesh அவனோட பக்கத்துல பதிவு செய்திருந்தான்.  படிக்கிறப்பவே சிரிப்பு வந்துச்சு..

இதோ அவனது பக்கத்திலிருந்து....

கட்டபொம்மன் நம்ம எடத்தில பெறந்தவனா இருந்திருந்தா எப்டி பேசியிருப்பான்??!!!

ஜாக்சன்:கட்ட பொம்மா வரி குடு???

கட்டபொம்மன்: லே பிச்சகாறபயல எங்க வந்து என்னத்தவல கேக்கிய, நாடன் குத்தில ஒரு குத்து குத்தினேன்னு வச்சுக்க , மோண்டு, மோண்டு தொன்னூறூக்கு செத்து போவ கேட்டியா, நீ ஞாறு நட்டியா, இல்ல வௌ்ளம் கோரினியா, இல்ல வேற என்னத்தயெங்கிலும் செய்தியால, இல்ல உளுது மரம் அடிச்சியா மாட்டுக்கு காடி வௌ்ளம் குடுத்தியா, இல்ல மாட கழுவினியா, இல்ல மாட்டுக்கு ஒரு பிடி பில்லெங்கிலும் பறிச்சு இட்டியா நீ???

ஒண்ணும் செய்யாாத செத்து இருந்துண்டு பயிசா கேக்க வந்திருக்கியான், வக்கற்ற வௌ்ளகாற பட்டி பய, ஒனக்கு இப்பிடி கேட்டூண்டு நடக்க கொஞ்சம் கூட கொறச்சல் இல்லியால சாக்சா, நாலுமுக்கு றோட்ல பெய் ஒரு தோர்த்து விரிச்சூண்டு இருந்து பெய் எரந்து பிச்ச எடுவல??? கண்ணுமின்னண்டு மரியாதைக்கு போ இல்லியங்கி மாட்டுக்க கோமாளிய பிடிச்சு மூஞ்சில ஊத்துவேன் ஓடு த்தூ நாயே வந்திருக்கியான் அங்கண்டூ இஞ்ச பிச்சகே்க வந்திருக்கியான் பட்டி பய!!!!

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 4460