வயிறு வலிக்க சிரிப்பதற்காக மீண்டும் ஒரு வட்டார வழக்கு ஸ்டேட்டஸ் குஷி படத்திலிருந்து

வயிறு வலிக்க சிரிப்பதற்காக மீண்டும் ஒரு வட்டார வழக்கு ஸ்டேட்டஸ்

குஷி படத்தின் பிரபல “நீ இடுப்ப பார்த்தியா.. நீ பார்த்ததை நான் பார்த்தேன்!” காட்சியை கன்னியாகுமரி மேற்குமாவட்ட தமிழில் பேசினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை!

- ஹலோ..

- பரிச்சடே படிச்சூண்டிருக்கியேன்!!!

- சிவா நீ செய்யேது செரியில்ல கேட்டியா

???

- நான் அப்பிடி கெட்ட புக் ஒண்ணும் படிச்சல்ல! பாக்கேதும் நல்லாதானே பாக்கியேன்!

- பேச்ச மாற்றாத

- என்னத்த பெண்ணே நீ செல்லிய எனக்கு ஒரு எளவும் மனசிலாவல்ல!!

- நீ எனக்க இடுப்ப பாத்தியா இல்லியா!!

- இல்ல

- நீ பாத்த பாத்த பாத்த அத நான் பாத்தேன்

உள்ளத செல்லு பாத்தியா இல்லியா

- முகத்தில பாத்து பேசம்ப அறியாத கண்ணு கீள பெய்யிருக்கும் அத நீ வலிய காரியம் ஆக்கண்டாம்டியே

- என்னத்த அறியாத!!! நீ இஞ்ச வந்து ஒரு நிமிசம் கூட ஆவல்ல , ஒரு பக்கமெங்கிலும் படிச்சியா இல்ல, ஆனா ஒரு பத்து தடவயெங்கிலும் எனக்க இடுப்ப நீ பாத்த,

- போபெண்ண இவ பெரிய ஐசுவரியா அதனால இவளுக்க இடுப்ப நான் பாத்தனாம், எனக்கு வேற சோலி இல்ல, இவளுக்க இடுப்ப பாக்கேதுதானாம் சோலி,எப்ப இது என்னத்த இடுப்பா????எப்ப பாத்தாலும் என்ன தப்பாவே பாக்கியா

- தப்பா பாக்கேது நீயா இல்ல நானால எளவே???

- அண்ணு வாவு பய ஒரு எழுத்து எழுதி தந்தான் அத நான் கொண்டு வந்து ஒனேட்ட தந்ததும் நீ என்ன சொன்ன, உன் புத்தி கெட்ட புத்தி அடுத்தவங்க லெட்டர பிரிச்சு படிச்சேன்னு,பெறவு அவன் கைல அடிபட்டு ,அதனால நான் தான் எழுதினேண்ணு சென்னதும் வந்து மாப்பு கேட்ட,அது போல ஒன்ன மொதல்ல பாத்த அண்ணுகூட

பாபு சாந்திக்கு குடுக்க தந்த லெட்டர நான் ஒனேட்ட தந்ததும் ஐயோ அம்மா ஐயோ அம்மாணு கெடந்து சாடின!!! உன் மனசில என்னண்ண ஒன்ன எல்லாரும் பாக்கணும் சைட் அடிச்சணும், ஆனா அப்டி செஞ்சா ஒடனே குய்யோ முறையோனு ஒப்பாரி வைப்ப, எனக்கு தெரியாதா பெண்ணுவளுக்க கேரக்டர்!!!

- என்ன பற்றி வேணும்னா பேசு , பெண்ணுவன்னு செல்லி எல்லாரையும் சேத்து பேசாத செரியா.. ·


இப்படி நீள்கிறது....

Ratheesh R S Posted by Ratheesh R S


views: 6324
   

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs