ஏ.வி.எம். கால்வாய் நீர் வழித்தடம் - கன்னியாகுமரி


அனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய் என்பதை சுருக்கமாக ஏ.வி.எம்.கால்வாய் (A.V.M Chanal) என்று கூறுகின்றனர். இந்த கால்வாயின் முக்கிய நோக்கம், திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைப்பது என்பதாகும். இதை உத்திரம் திருநாளில் மார்த்தாண்டவர்மா (1847-1860) ஆல் 1860-ல் தொடங்கப்பட்டது. மன்னர் 1860-ல் காலமாகவே அவரது வாரிசு மன்னரான ஆயில்லியம் திருநாள் ராமவர்மான (1860 – 1880) இப்பணியைத் தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக புவாறில் இருந்து தேங்காப்பட்டணம் தாமிரபரணி நீர்த்தேக்கம் வரை சுமார் 10 கல் தூரம் வெட்டப்பட்டு 1864 பிப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் குளச்சல் வரையிலும் அதாவது மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி கோயில் வளாகம் வரை வெட்டப்பட்டது. 1867-ல் இத்திட்டம் பல காரணஙகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர்.மாதவராவ் குறிப்பிடுகிறார்:‐

கேரளா வற்கலை கால்வாய் பணி தொடங்கிவிட்டதால் எ.வி.எம். கால்வாய் பணியை அரசு நிறுத்திவிட்டது என்று தெரிகிறது. பணமுடைதான் முக்கிய காரணம் என்பது இதனால் புலனாகிறது. இருப்பினும் இந்த கால்வாயின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்திருந்தது.

கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலும் அங்கிருந்து கொல்லம் வரையிலும், அஙகிருந்து கொச்சி வரையிலும் நீர்வழி பொக்குவரத்துக்காகவே மேற்படி திட்டத்தை திருவிதாங்கூர் மன்னர்கள் தொடங்கினர்.

இந்த திட்டம் நிறைவேறியிருந்தால் இன்று குமரி மாவட்டத்தில் உருவாகியிருக்கின்ற போக்குவரத்து நெருக்கடியை இந்த நீர்வழி பொக்குவரத்து வசதி சுலபமாக தீர்த்து வைத்திருக்கும். தவிரவும் சுற்றுலாத்துறையும் இதனால் பெரும் பயன் அடைந்திருக்கும். கேரளாவில் கால்வாய்கள் வெட்டி நீர்வழி போக்குவரத்தை வளரச் செய்தமையால் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் கேரளம் முதல் இடத்தில் இருப்பதற்கு மூலக்காரணம் இந்த கால்வாய்களும, அதில் ஓடிக் கொண்டு இருக்கின்றஉல்லாச படகுகளும்தான். காஷ்மீரத்தின் படகு வீடு கலாச்சாரத்தை கேரளம் இன்று தட்டியெடுத்துவிட்டமையால் அங்கே சுற்றுலாத்துறை பல மடங்கு வளர்ந்து இருப்பதையும் காணலாம்.

இதைப்பொன்று தமிழ்நாடு குமரி மாவட்டத்திலும் உல்லாச படகு சவாரியை ஊக்குவிப்பதற்கு நின்றுபொன இந்த ஏ.வி.எம். கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்கப்பட்டு, கால்வாயை தொடர்ந்து வெட்டி கன்னியாகுமரி வரைக் கொண்டு செல்ல வெண்டும். நாளடைவில் இந்த கால்வாயை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி மற்றும் அதாவது நெல்லை தாமரபரணி ஆறு கடலில் சங்கமிக்கின்ற இடமான காயல்பட்டிணம் வரையும் நீட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த கால்வாயை தேங்காப்பட்டணத்தில் இருந்து மீண்டும் அகலமாக வெட்டி மணக்குடி வரை நீட்ட வெண்டும். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திலும் இத்திட்டத்தை திரும்பவும் எந்த அளவுக்கு மீண்டும் செயல்படுத்தலாம் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கால்வாயை மீண்டும் வெட்டுவதன் மூலம் மாவட்டத்திற்கு கிடைக்கின்ற பயன்கள் அதிகம். அவைகளாவன:‐

1. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரையில் நீர்வழிபோக்குவரத்து அதிகரித்து மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருவாரியாக குறையும்.

2. இதனால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

3. சுற்றுலா வாய்ப்பு அதிகரித்து பலருக்கு மேலும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

4. நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி நன்னீர் விவசாயம் வளரும். 

5. மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உப்பு இல்லாத நல்ல குடிநீர் கிடைக்கும் மற்றும் கடல்அரிப்பு இயற்கையாக குறையும்;.


வேண்டுகோள்:

1. ஏ.வி.எம். கால்வாயை தேங்காப்பட்டணத்திலிருந்து மீண்டும் விரிவாக வெட்டி முதல் கட்டமாக கன்னியாகுமரி வரை (மணக்குடி) அமைக்க வேண்டும். இத்திட்டத்தை நடுவன் அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டமாக எடுத்து அவர்களே இதை செயல்படுத்த வேண்டும்.

2. சுற்றுலாவுக்காக அந்த கால்வாயில் படகு சவாரி ஏற்படுத்த வெண்டும். ஏ.வி.எம். கால்வாய் நீர்வழிப் பொக்குவரத்துத் திட்டம் என்பதால் இதை மத்திய அரசு கப்பல் போக்குவரத்துத்துறையைக் கொண்டு நிறைவேற்றிடச் செய்தல் வெண்டும். அதன் பொறுப்பை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு ஆவன செய்தல் வெண்டும்.


தொடரும்...

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs