பழமையின் பெருமையுடன் திற்பரப்பு பழைய பாலம்....


மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சி காலத்தில் கோதையாற்றின் குறுகே திற்பரப்பில் கட்டப்பட்டது...

1919 ல் கட்டி முடிக்கப்பட்ட இரும்பு பாலம் 35 ஆண்டுகள் மக்கள் முழுமையாக பயன்படுத்தினர். 54 ஆண்டுகளாக கேட்பாரற்ற நிலையில் பராமரிப்பு இன்றி கிடந்தும் இரும்பு பாலங்களுக்கோ, பிரத்யேக கலவையால் கட்டபட்ட கல்தூண்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை...

இரும்பு பாலத்தின் மேல் மரப்பலகைகளால் மேல்தளம் அமைத்திருந்த பாலத்தின் மேற்பகுதியை மக்கள் தங்கள் தேவைகளுக்காக எடுத்து மாற்றினர். இரும்பு பாலத்தின் மேல் பகுதி வழியாக அப்பகுதி மக்கள் இன்றும் கால்நடையாக ஆற்றை கடக்கின்றனர்..

வரலாற்று நினைவு சின்னமாக மாறியுள்ள பாலத்தை பராமரித்து மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தலாம்.


Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 5664