
அருமனையிலிருந்து கடையாலுமூடு செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்கள் பயணிகளுக்கு சிரமத்தை கொடுப்பதால் ரோடு சீரமைக்க போராட்டத்தை அறிவித்தனர். போராட்டத்தை தவிர்க்கவும், ஏற்கனவே களியல் பிஜுலால் முதலமைச்சர் தனி பிரிவில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கையாகவும் குவாரி கழிவுகளுடன் பள்ளங்கள் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இவ்வாறு பணிகள் மேற்கொண்டால் தூசி படர்ந்து பெரும் சிரமம் ஏற்படும் என கடையாலுமூட்டில் பொதுமக்கள் பணிகளை தடுத்தனர்.
தற்போது எல்லா போராட்டங்களுக்கும் தீர்வாக பள்ளங்களில் பாறாங்கற்களை போட்டு நிரப்புகின்றனர் நெடுஞ்சாலைத்துறையினர். யாருக்கும் ஆட்சேபனை இல்லை .... பயணிகள் கவனமாக செல்லுங்கள் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை..


Posted by







