மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள்...

மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள் இன்று காலை 5 மணி முதல் மக்களின் வாகன பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது..

Photo By Sajjayan Dhanajayan Nair

மத்திய அரசின் 372 கோடியில் கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் இன்று குமரி மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதிகளில் வாகன நெருக்கடியால் ஏற்படும் போக்குவரத்து தடை பயணிகளை பாடாய் படுத்தியது பல வருடங்கள். இதற்கான தீர்வு மேம்பாலங்கள் தான் என மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஆண்டுகளாக பேசி வந்தனர். பலர் முயற்சி எடுத்ததாக கூறப்பட்டாலும் மேம்பாலங்கள் கனவு திட்டமாகவே இருந்து வந்தது. பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் வாக்குறுதியாக இதை குறிப்பிடும் போதும், வெற்றி பெற்று இத்திட்டத்திற்கான முயற்சிகளை துவங்கும் போதும் திட்டம் நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகம் நம்மிடம் இருந்தது. ஆனால் பொன்னாரின் விடா முயற்சியுடன் மத்திய அரசின் ஒத்துழைப்பால் திட்டம் நடைமுறைக்கு வந்தது. விமர்சனங்கள் பல தரப்பில் வரலாம். ஆனால் மத்திய அரசு குமரி மாவட்டத்தில் மேற்கொண்ட பிரதான திட்டமாக இதை பார்க்கலம். இத்திட்டங்கள் பொன்.ராதாகிருஷ்ணனின் சாதனையாகவே அமைந்துள்ளது. ரோடுகள் பராமரிப்பு, மேம்பாலங்களுக்கு தனி கவனம் கொடுத்த அமைச்சர் சுற்றுலா, விவசாய திட்டங்களுக்கும் கூடுதல் கவனம் கொடுத்திருந்தால் சாதாரண மக்களுக்கு கூடுதல் பலன் கிடைத்திருக்கும்..

அனுபமா என்ற யானையின் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் முதல் பயணம்...

Photo By Sajjayan Dhanajayan Nair

Photo By Jaya Mohan Thirpparappu



Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 1893
   

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!