இணைந்த கரங்களும் கிடைத்த வெற்றியும் - குற்றியாறு அரசு பள்ளி


எந்த ஒரு செயலும் தனிநபராக இருந்து செய்வதில் இருக்கும் சங்கடங்கள் பல கரங்கள் இணைகையில் எளிதாக நிறைவடையும்.அவ்வாறே இணைந்த பல கரங்களின் சாதனை இன்று மலைவாழ் கிராம்மான குற்றியாரில் வண்ணங்களால் வசந்தத்தை அடைந்த்து. சென்னை வாழ் குமரி மைந்தர் திரு.ராஜசிம்மன் அவர்கள் 2 மாததிற்கு முன் என்னுடன் குற்றியாறு பள்ளிக்கு வந்து, அந்த பள்ளியின் நிலைமையை கண்டு என் எண்ணங்களுக்கு வண்ணத்தை அளித்தார். அறம் செய விரும்பு சென்னை ராஜசிம்மன் அவரது நண்பர்களுடன் இணைந்து இப்பள்ளிக்கு உதவிகரம் நீட்டினர். தண்ணீர் வசதி இன்றி மின்சார வசதி இன்றி இருந்த பள்ளி.

இன்று தண்ணீர் வசதியுடன், சுவரெங்கும் தலைவர்கள் உதிர்த்த பொன்மொழிகளுடன் தலைவர்கள் படங்கள், தினம் ஒரு திருக்குறள் எழுத வள்ளுவருடன் கூடிய சுவரொட்டி. நீரும் உணவு தேவைகளும் அவற்றை வீணாக்காமல் இருக்க அறிவுரைகளும், smart class அதற்க்கு சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் வசதி, சுவரெங்கும் ஓவியரின் கைவண்ணம் மேசைகள் அனைத்திலும் குழந்தைகளுக்கு கல்விக்கும், விளையாட்டுக்கும் தேவையான வரைபடங்கள், மரக்கன்றுகள், காய்கரி செடிகள், குழந்தைகள் முகம் பார்க்க ஆள் உயர கண்ணாடி, முகப்பூச்சு, சீப்பு, கை கழுவ சேப்ஆயில், படி கட்டுகளில் அர்த்தமுள்ள வாக்கியங்கள், கரும்பலகைகள், குழந்தைகளுக்கு shoe, tie, belt, notebooks, pencil box உபகரணங்கள் ......... என அனைத்தையும் முழுமையாக செய்தாயிற்று.

இத்தனையும் தனி ஒருவராய் காவல் துறை வேலைகளுக்கிடையில்செய்வதெனில் காலம் எடுக்கும். ஒட்டுமொத்த உள்ளங்களின் கூட்டுமுயற்சியே. பண உதவியும், பொருளுதவியும், உடல் உழைப்பும் இணைந்தே இன்று குற்றியாறு பள்ளி இன்ன பிற பள்ளிகளுக்கு மாதிரியாக விளங்கும் வண்ணமும், தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும் இன்று திகழ்கிறது. உடலால் உழைத்த நல்லுள்ளங்களுக்கும் ,செயல் வடிவமும் ஆலோசனையும் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து தந்த உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்பிக்கிறேன்.




Sam AB Positive Posted by Sam AB Positive


views: 2231