For Advertising... Please Contact - 9940542560

Rajagopalaswamy Temple - Palayamkottai

   1  |   

ஆரத்தித் தட்டால் அடிவாங்கி பெண்ணை ஆணாக்கிய ஆண்டவன் கதை..


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அழகியமன்னார் இராஜகோபால சுவாமி கோயிலின் உற்சவர் சிலை மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்று. அச்சிலையின் மூக்கு பகுதியில் ஒரு பெரிய தழும்பு பள்ளம் காணப்படுகிறது. அதற்கொரு சுவாரசியமான கதை சொல்லப்படுகிறது.

இக்கோயிலில் விஷ்ணுப்ரியன் என்ற பூசகர் இராஜகோபாலசுவாமியை தினமும் பூஜித்து வந்தாராம். அவருக்கு தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகள் பிறந்தன. தனக்குப் பின் கோபாலசுவாமிக்கு பூசைகள் செய்ய ஓர் ஆண் குழந்தை ஒன்றுமில்லையே என்ற எண்ணிய அவர் ஏக்கமும்,, வருத்தமுமாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என சுவாமியிடம் வேண்டினாராம். அவரது மனைவி கலாவதி மீண்டும் கருவுற அம்முறையும் அவருக்கு பெண் குழந்தையே பிறந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதனால் சினம் கொண்ட பூசகர் விஷ்ணுப்ரியன், ஆரத்தித் தட்டை எடுத்து சுவாமியின் முகத்தின் மீது வீசினாராம். அத்தட்டு சுவாமி மூக்கின் மீது பட்டு தழும்பு ஏற்பட்டதாம். அதே கோபத்துடன் விஷ்ணுப்ரியன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பெண் குழந்தை, ஆண் குழந்தையாக மாறியிருந்ததாம். அதைப் பார்த்து பதறிப்போன விஷ்ணுப்ரியன், கோயிலுக்கு ஓடினாராம்; தனது செயலை எண்ணி வருந்தி சுவாமி காலில் விழுந்து அழுதாராம். இதன் காரணமாகத்தான் இந்த சுவாமிக்கு "பெண்ணை ஆணாக்கிய இராஜகோபாலன்" என்ற பெயர் வந்ததாம். அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டர்கள் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

இக்கதையின் நோக்கம் என்னவாக இருக்கும்?

Credits: Anantha Subramonian

Pic Courtesy: Rajesh Kumar

Time: 6.00 AM to 11.00 AM and 4:00 PM to 8:00 PM

Festivals:

Panguni Brahmotsavam

Varsha Abisekham

Garuda Sevai on Purattasi Saturdays

Vasantha Panchami

Vaikunda Ekadasi

Garuda Jayanthi

Pic Courtesy: Rajesh Kumar

Pic Courtesy: Rajesh Kumar

Pic Courtesy: Rajesh Kumar

   1  |   

Other Pages