For Advertising... Please Contact - 9940542560

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்...

Tirunelveli Town  |        |   

Pic Courtesy: Rajesh Kumar

நெல்லையின் அடையாளங்களுள் ஒன்றாக இருப்பது, இருட்டுக் கடை அல்வா. நெல்லையப்பர் கோயிலின் எதிரில் எந்தவிதமான விளம்பரப் பலகையும் இல்லாமல் 50 வாட்ஸ் குண்டு பல்ப் வெளிச்சத்தில் இருட்டுக் கடையில் வியாபாரம் நடக்கும்.

பிற கடைகளின் அல்வாவை விடவும் இருட்டுக் கடை அல்வாவின் சுவை தனியாக இருக்கும். அதனால் மாலை 5 மணிக்குத் தொடங்கி 8 மணி வரை மட்டுமே நடக்கும் கடையில் அல்வா வாங்குவதற்குக் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லையில் செயல்பட்டு வந்த இருட்டுக்கடையின் உரிமையாளராக ஹரிசிங் என்பவர் இறந்தார். 75 வயது முதியவரான அவர் சாதுவான குணம் கொண்டவர். யாரிடமும் அதிர்ந்துகூட பேச மாட்டார்.

கடந்த சில தினங்களாகக் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட அவருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ‘பாசிட்டிவ்’ என ரிசல்ட் வந்துள்ளது. அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகத் தெரிகிறது. குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுத்துவிட்ட சோகம் ஒரு பக்கம், கொரோனா குறித்த அச்சம் மறுபக்கம் என மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்.

கொரோனா பாதிப்புக்குள்ளான ஹரிசிங்கை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளான இருட்டுக்கடை உரிமையாளர் ஹர்சிங் இன்று தனியார் மருத்துவமனையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.


Courtesy: Rajesh Kumar


Pic Courtesy: Rajesh Kumar

     |