For Advertising... Please Contact - 9940542560

கொரோனா மீதான பயத்தை நீக்குவோம்...

Corona Updates  |        |   

கொரோனா மீதான பயத்தை நீக்குவோம்... இந்த நோய் ஒரு நாள் நம்மளையும் தாக்கும் என்ற உண்மையை புரிந்துக் கொள்வோம்...

சைனாவில் தொடங்கி, வெளிநாடுகளில் பரவி, இன்று நம்மை நெருங்கி நிற்கிறது கொரோனா வைரஸ். இரண்டு மாதங்களுக்கு முன் இந்த வைரஸ் தாக்கத்தை நாம் பார்த்த பார்வையில் இன்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நோய் மூலம் நம்மில் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலானோருக்கு இது அம்மை நோயின் சிரமங்களும், சங்கடங்களும் கூட கொடுப்பதில்லை. நமக்கு நோய் தொற்றிக் கொண்டால், நம் மூலமாக பலர் நோயாளிகளாக மாறிவிடுவோம் என்ற சங்கடம் மட்டுமே பெரியளவில் மனதை உலைக்கும். ஆனால் இதையும் தாங்கிக் கொள்வதின்றி வேறு வழியில்லை.

கொரோனா நோயைவிட சில மனிதர்களின் மனநிலை மிக கொடூரமாக மாறுவதுதான் அதிக வேதனையாக உள்ளது. நண்பர் ஒருவரின் உறவுக்கார இளைஞன் கொரோனா உறுதி செய்து சிகிட்சையில் உள்ளார். இன்று காலை என் நண்பனர போனில் அழைத்து விசாரித்தேன். நோயாளியாக சென்ற தம்பிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சாதாரணமாகவே உள்ளர். இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என கூறினார். "கொரோனா நோய் பெரிய விஷயமல்ல. சிறிய கவனக்குறைவால் ஒருவர் கொரோனா நோயாளியாக மாறலாம். ஆனால் எதோ பாவம் செய்த ஜன்மமாக நோயாளிகளை பார்ப்பது தான் மிகப் பெரிய கொடூரம்." என அவர் ஒரு வார்த்தை சொன்னது என் மனதையும் தொட்டது. என்ன அண்ணா இப்படி ..என்று கேட்டேன். " எங்க பைய்யன் ஆஸ்பத்ரி செல்ல ஆம்புலன்ஸிற்காக காத்து நிற்கும் நேரம், வெளியே ஒரு நபர் செல்போனுடன் காத்திருந்தார். ஆம்புலன்ஸ் ஏறும் நோயாளியை படம் எடுக்க காத்திருக்கும் நபரை கண்ட எங்க பைய்யன் விவரத்தை எனக்கு தெரியப்படுத்தினான். நான் போனில் தொடர்பு கொண்டு வெளியே நின்றவரிடம் பேசியதும், அவர் திரும்பி சென்றார். இதனால் அவருக்கு என்ன பலன் என தெரியவில்லை." என அவர் விளக்கினார்.

உண்மை இது போன்ற செயல்கள் பல இடங்களில் நடக்கிறது. இவ்வாறு படம் எடுப்பவர்களின் மனநிலை எந்த நிலையில் உள்ளது. இதனால் மனதளவில் பாதிக்கப்படும் மக்களின் நிலமையை புரிந்துக் கொள்ளுங்கள். மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் மனநிலையை....

Courtesy: Jaya Mohan Thirparappu

     |