For Advertising... Please Contact - 9940542560

கடலும் மிக உயரமான மலை தொடர்களையும்...

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபற்றி விரிவான பதிவு செய்யப்பட்டது தற்போது மீண்டும் ஒரு பதிவு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதியில் 63km நீள மேற்கு கடற்கரை நம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது திருவனந்தபுரம் 78 km நீள மேற்கு கடற்கரை, கொல்லம் மாவட்டம் வெறும் 37km நீள மேற்கு கடற்கரை ,ஆனால் நம்ம கன்னியாகுமரி மாவட்டத்தில் 63 km நீள மேற்கு கடற்கரை கிராமங்கள் உள்ளன நம் மாவட்டத்தில் 95% கடலோர கிராமங்கள் மேற்கு கடற்கரையில் உள்ளன , முக்கியமாக இரண்டு மிகப்பெரிய மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன (குளச்சல் மீன்பிடி துறைமுகம், மீன்பிடி துறைமுகம், தோங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ளன நம் மாவட்டத்தின் 90% மீனவர்களின் மீன்பிடி பகுதியாக அரபிக்கடல் அமைந்திருக்கிறது , இதில் குளச்சல் இயற்கை துறைமுகம் ஆகும் !!!, கடல் மட்டத்தில் இருந்து உயரமான கடற்கரை பகுதிகள் முட்டம் மற்றும் கடியப்பட்டணம் பகுதி கடற்கரை பகுதிகள் ஆகும் கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருந்து 48 முதல் 55 மீட்டர் வரை உயரமான பகுதி ஆகும், அதே போல கன்னியாகுமரி கடல் மட்டத்தில் இருந்து 37 மீட்டர் உயரம் கொண்டது ஆனால் கடல் மட்டத்தில் இருந்து 5 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட பகுதி பிள்ளைதோப்பு , அழிக்கால் , அதுபோல , தூத்தூர் ,பூதுறை ,போன்ற கடலோர பகுதிகள் ஆகும் , கேரளாவில் கூட பல கடலோர பகுதிகளில் மேற்கு கடற்கரை பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரம் குறைவான பகுதிகளில் ஆகும் உதாரணமாக திருவனந்தபுரம் மேற்கு கடற்கரை பகுதி விமானநிலையம் வெறும் 5 மீட்டர் மட்டுமே உயரம் , அலப்புழா 4 மீட்டர் மட்டுமே உயரம் ஆனால் நம் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை பகுதிள் பெரும்பாலான இடங்கள் கடல் மட்டத்தில் இருந்து சற்று உயரமாகவே உள்ளது ,
Pic Courtesy: Anand GK
மேற்கு தொடர்ச்சி மலைக்கு இணையானது மேற்கு கடற்கரை ஆகும் இதனால் தான் நம் மாவட்ட கடற்கரை பகுதிகள் கூட நீர்வளம் பசுமையான மரங்கள் சூழ்ந்து பசுமை போர்வை போர்த்தி உள்ளது நம் மாவட்டத்தை சூழ்ந்து நமது மாவட்டத்திற்கு இயற்கை அரணாக வடக்கிலும் & கிழக்கிலும் எல்லைகளாக கடல் மட்டத்தில் இருந்து 1816 மீட்டர் அதிகபட்ச உயரம் 6000 அடி உயரம் கொண்ட மலை தொடர் குமரி மாவட்டத்தில் உள்ளது (எ.கா - அச்சன்காடு மாறாமலை 6000 அடி உயரம்) இது தவிர வடக்கிலும் கிழக்கிலும் நமது மாவட்டத்தை சூழ்ந்து பெரும்பாலான பகுதிகள் 4500 அடி முதல் 5500 அடி வரை உயரம் கொண்ட மலை தொடர்களும் அதன் அடர்ந்த காடுகளும் நமது மாவட்டத்தை சூழ்ந்து வடக்கிலம் கிழக்கிலும் சூழ்ந்து நமக்கு இயற்கை அரணாக எல்லையாக அமைந்துள்ளது , இதனால் தான் ஈரப்பதம் மிகுந்த நம் அரபிக்கடல் காற்றை நேர் எதிரே நிற்கும் மலை தெர்களால் தடுக்கப்பட்டு மேக கூட்டங்களை உருவாக்கி மழை வளத்தை அனைத்து பகுதிகளிலும் சமமாக தருவதில் மிக முக்கிய பங்கு உள்ளது அதனால் தான் வற்றாத ஆறுகள் நம் அரபிக்கடல் பகுதியில் தண்ணீர் கொண்டு சேர்த்து நம் கடலோர பகுதிகள் கூட மிக சொழிப்பாக பசுமையான மரங்களை ,தென்னை மரங்களை கொண்டிருக்கிறது அது போக பலாமரங்கள் பலதரப்பட்ட மரங்கள் , ஏன் முட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கூட இயற்கையாக சந்தணமரங்கள் மற்றும் கொல்லாவு மரங்களை அதிகம் கொண்ட பகுதி முட்டம் ,அதுபோல பல கடலோர பகுதியில் தேக்கு , தென்னை அதிகமாக உள்ளது .!! இதே இது திருநெல்வேலி ஆரம்பித்து திருவள்ளூர் வரை காவிரி வடிநில பகுதியை தவிர்த்து மற்ற ஏனைய கிழக்கு கடற்கரை பகுதியில் வறண்ட வேலி கருவேலம் மரங்களும் முட்புதர்களும் தான் அதிகமாக உள்ளது, !!!
நமக்கு மலைகளுக்கும் கடலுக்கும் உள்ள தூரம் வெறும் 5 கிலோமீட்டரை விடவும் கன்னியாகுமரி பகுதியில் குறைவு கடல் மட்டத்தில் இருந்து நேர் எதிரே நமது மாவட்டத்தை சூழ்ந்து நிற்கும் மிக உயரமான நமது மாவட்ட மலைக்கும் கடலுக்கும் .இடைப்பட்ட தூரம் வெறும் 34 km தான் !! இதனால் தான் கன்னியாகுமரி ஆரம்பத்து குஜராத் வரை மேற்கு சரிவு நமக்கு பசுமை போர்வையாக உள்ளது அதனால் தான் நம் கன்னியாகுமரி வானிலை இயற்கை சூழல் தமிழக மற்ற இடங்களில் மாவட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது , !!!

பெரும்பாலான கடற்கரை கிராமங்கள் நம் மேற்கு கடற்கரை பகுதியில் 63km வருகிறது,
---------------
நம் மாவட்ட மேற்கு கடற்கரை ஊர்கள்,
1)நீரோடி,
2)மார்த்தாண்டம்துறை,
3)கொல்லங்கோடு,
4)இரையுமன்துறை,
5)இரையுமன் புத்தன்துறை,
6)தூத்தூர்,
7)தேங்காய்பட்டணம்,
8)மூள்ளூர்துறை,
9)ராமன்துறை,
10)இனையம்புத்தன்துறை
11)மிடாலம்
12)மேல்மிடாலம்
13)குறும்பனை,
14)கோடிமுனை,
15)வணியக்குடி,
16)சைமன்காலனி,
17)குளச்சல்
18)கொட்டில்பாடு,
19)மண்டைக்காடு(புதூர்)
20)பெரியவிளை,
21)சின்னவிளை,
22)கடியப்பட்டணம்,
23)முட்டம்,
24)மேலத்துறை,
25)பிள்ளைதோப்பு,
26)அழிக்கால்,
27)லெமூர்கடற்கரை,
28)ராஜாக்கமங்கலம்துறை,
29)மேலதுறை
30)பெரியகாடு,
31)மொழிக்கரை,
32)தென்பால்கடற்கரை,
33)புத்தன்துறை,
34)பள்ளம்துறை,
35)மணக்குடி,
36)மேலமணக்குடி,
37)கோவளம்,
38)கன்னியாகுமரி,
39)இனையம்

கிழக்குகடற்கரை பகுதியில்
40)சின்னமுட்டம்,
41)லீபுரம்,
42)ஆரோக்கியபுரம் ,
43)வட்டக்கோட்டைகடற்கரை,
கிழக்கு கடற்கரை வெறும் 6 km மட்டுமே நீளம் கொண்டது ஆக மொத்தம் 69 km நீள கடற்கரை மலைகளுக்கு ஒப்பாக அமைந்திருப்பது நம் இயற்கையின் சிறப்பு ,
மேலும் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியில் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வரும் மணக்குடி சசுற்றுவட்டாரம் , அதுபோல மாங்ரூவ் காடுகள் , அளத்தங்கரை ராஜக்கமங்கலம், மணக்குடி பழையாறு, அடர்ந்து வளர்ந்துள்ளன மேலும் அதிகளவில் ஆமைகள் மூட்டையிடும் மிகவும் பாதுகாக்கப்பட்ட இடங்களும் உள்ளன , மேற்கு கடற்கரை சாலை கன்னியாகுமரி ஆரம்பித்து குஜராத் வரை போகிறது அதே போல மேற்கு தொடர்ச்சி மலையும் கன்னியாகுமரி அருகில் ஆரம்பித்து குஜராத் வரை போகிறது, மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவு வறண்ட சமவெளி பகுதி ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவு நம் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை வளமான பகுதி,

AVM கால்வாய் நீர் வழி போக்குவரத்து ,
வரலாறு சிறப்பு மிக்க AVM கால்வாய்யை தூர்வாரி பராமரிப்பு செய்து நீட்டிப்பதன் மூலம் நம் கன்னியாகுமரி முதல் தற்போது உள்ள கொச்சி வரை நீர்வழியாக மேற்கு கடற்கரை சாலைக்கு இணையாக நீர்வழி பாதை வழியாக பயணிக்க முடியும்,

ஆக மொத்தம் அனைத்து வளங்கள் சிறப்புகள், இயற்கை சூழல் கொண்டது நம் கன்னியாகுமரி கடலோர பகுதிகளும் பாதுகாப்போம்,

**************

Courtesy: கன்னியாகுமரி மாவட்டம்  வானிலை

   1  |