Sree Bhadrakali Temple Kollemcode

Kollemcode  |        |   

Pongal in Kollemcode Temple

Photo By Radhakrishnan Kollemcode

Photo By Radhakrishnan Kollemcode

Kollemcode Thookkam Mar 30 at 8 AM – Apr 8 at 11:59 PM

Photo By Radhakrishnan Kollemcode

Photo By Radhakrishnan Kollemcode

Photo By Radhakrishnan Kollemcode

Photo By Radhakrishnan Kollemcode

Photo By Radhakrishnan Kollemcode


Photo By Radhakrishnan Kollemcode

தூக்க நேர்ச்சை குழந்தைகளைக் காக்கும் கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன். 


தென் தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் தனிச்சிறப்பு பெற்றது கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் .இக்கோயில் குமரி மாவட்டத்தில் அரபிக்கடல் ஓரமாக, தமிழக - கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் வழிபாட்டு முறைகள் கேரள கலாசாரத்தை ஒத்து உள்ளது.கோயில் அமைந்துள்ள பகுதி பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததே இதற்குக் காரணம்.

கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒரே வழிபாட்டு முறை கொண்ட அம்மனுக்கு இங்கு மட்டுமே இரண்டு கோயில்கள் உள்ளது இன்னொரு சிறப்பாகும். கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 500 மீட்டர் தூரத்தில் வட்டவிளையில் மூலக் கோயிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி 500 மீட்டருக்கு அப்பால் வெங்கஞ்சியில் திருவிழா கோயிலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பங்குனி பரணியை முன்னிட்டு 10 நாட்கள் நடக்கும் தூக்கத் திருவிழாவுக்காக அம்மன் மூல கோயிலில் இருந்து வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவாள். இதேபோன்று ஆண்டுதோறும் மகரவிளக்கை முன்னிட்டு 41 நாட்கள் நடக்கும் மண்டலகால சிறப்பு பூஜைக்கும் அம்மன் எழுந்தருளுவாள். இந்த பூஜை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வெங்கஞ்சி திருவிழா கோயிலில் நடக்கிறது. ஏனைய நாட்கள் அம்மன் மூலக் கோயிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழா காலங்களில் வெடி வழிபாடும் நடைபெறும்.தமிழகத்தில் கொல்லங்கோடு, மூவோட்டுகோணம், இட்டகவேலி உள்ளிட்ட ஒருசில கோயில்களில் மட்டுமே பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. அதுவும் கொல்லங்கோட்டில் மட்டுமே ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் முக்கிய நிகழ்வு தூக்க நேர்ச்சைதான் .தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்ளும் குழந்தைகளின் பெயரும், தூக்க வில்லில் குழந்தைகளைத் தூக்கும் தூக்க காரர்களின் பெயரும் திருவிழா தொடங்கும் முன்னதாக பதிவு செய்யப்படும்.


Photo By Radhakrishnan Kollemcode

தூக்ககாரர்கள் கடும் விரதம் இருந்து கொல்லங்கோடு கோயிலிலேயே தங்கி இருக்க வேண்டும். தூக்க நாள் அன்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு முட்டுக்குத்தி நமஸ்காரம் செய்த பின் தூக்க நேர்ச்சை தொடங்கும்.இதற்காக அம்மன் தூக்க நேர்ச்சை பந்தலில் எழுந்தருளுவாள். முதலில் அம்மன் தூக்கம் நடைபெறும் அதன்பின் பதிவு செய்த குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெறும்.


Photo By Radhakrishnan Kollemcode

சுமார் 40 அடி உயரமுள்ள இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு பேரும், அவர்கள் கையில் ஒவ்வொரு குழந்தையும் என ஒரே நேரத்தில் எட்டு பேர் ரதத்தில் கோயிலை ஒருமுறை சுற்றிவரும்போது தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டதாக நம்பிக்கை.ஒரு சுற்றின்போது 4 தூக்க நேர்ச்சை நிறைவடையும். அதன்படி 366 முறை தூக்க வில் குழந்தைகளுடன் கோயிலை சுற்றி வரும்போதுதான் நேர்ச்சை முழுமையாக நிறைவடையும். சென்ற ஆண்டு 1434 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டியும், பெற்ற குழந்தைகள் நோய் நொடியின்றி, நல்ல அறிவு பெற்று நீண்டகாலம் வாழவும் அம்மனை வேண்டி தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் தூக்க நேர்ச்சை திருவிழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு கேரளாவிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் செல்கின்றனர். இந்த வருடம் திருக்கொடியேற்று March 12 2018  தூக்கம் March 21 2018 நடைபெற உள்ளது.


By Sree Bhadrakali Temple Kollemcode

     |