For Advertising... Please Contact - 9940542560

Adhikesava Perumal Temple, Thiruvattar

Thiruvattar  |        |   

கோயில் திறந்தாச்சு!!
....

ஐந்து மாதங்களுக்குப் பின்னர்
ஆதிகேசவப்பெருமாளை
ஆசை தீர கண்டு தரிசித்துத் திரும்பியாயிற்று..
மோட்டார் சைக்கிளை கோயில் முன்பு நிறுத்தி
முன் கோபுரத்தைக்காணகையிலேயே மனதுக்குள் ஆனந்தம்.
இன்று கோயிலுக்குள் நுழையும்போதே
ஏதோ ஒரு புது உலகிற்குச்செல்வது போல் உணர்வு.
கோயில் படிஏறி பிரகாரத்தைச்சுற்றி வந்து,
ஸ்ரீதர்ம சாஸ்தாவை முதலில் வணங்கி,
பின்னர் முன் மண்டபம் வழியாக
பெருமாளை கண்குளிர தரிசித்து,
பாலாலயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதருடன் அருள்பாலிக்கும்
எம்பெருமானுக்கு நடந்த தீபாராதனையையும் பார்த்து சிலிர்த்து,
கருவறையைச்சுற்றி வந்து
ரதி, மன்மதன் சிலைகள்,
கோபியரைக்கொஞ்சும் கண்ணன் சிற்பங்கள்,
தீபச்சட்டி சிற்பங்கள் எல்லாம் ரசித்து,
புல்லாங்குழலில் நாதம் எழுப்பும் கிருஷ்ணனையும்
வணங்கி,
அருகில் உள்ள நரசிம்மரையும் கைகூப்பி தொழுது,
பிரசாதமாக வழங்கிய வாழைப்பழத்தையும்
பெற்று திரும்பியாயிற்று..
ஆண்டவா, கொரோனா நோய் முற்றிலும் விலகி,
முன்பு போல் இவ்வுலகம் இன்புற வையப்பா என
வேண்டுதலும் வைத்தாயிற்று....!

Photo By Sureśa Kumāra

சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்!!

பொருள்: –
அமைதியான சொரூபம் கொண்டவர் திருமால். ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் அவருடைய நாபியில் தாமரை பூத்திருக்க… தேவர்களுக்கு தலைவராகவும், உலகங்களுக்கு ஆதாரமாகவும், ஆகாயத்தைப் போன்று எங்கெங்கும் பரந்து இருப்பவருமாகத் திகழ்கிறார் அவர்.
மேகம் போன்று கருநீலம் கொண்டவரும், மங்கலத் திருமேனியரும், மகாலட்சுமியின் நாயகனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவரும், யோகியரின் சிந்தையில் உறைபவரும், பிறப்பு- இறப்பு பற்றிய அச்சத்தை போக்குபவருமான ஸ்ரீமகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

– குருக்ஷேத்ர களத்தில் அம்புப் படுக்கையில் கிடந்த நிலையில், பீஷ்மர் தருமருக்கு அருளிய விஷ்ணு சகஸ்ரநாமத்தில்- ‘தியான’ பகுதியில் வரும் ஸ்லோகம் இது; மிகவும் பலன் தரக்கூடிய தியான ஸ்லோகம் .

வையகம் வாழட்டும்...!!
ஓம்..மஹா திருவட்டாறு ஆதிகேசவாய நமா!!

Courtesy: திருவட்டாறு சிந்துகுமார்

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் ஐப்பசி திருவிழா...

சனிக்கிழமை (26ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் கொடியேறுகிறது..

ஐந்தாம் விழாவான 30 ம் தேதி இரவு ஏழு மணிக்கு திருவம்பாடி கிருஷ்ணன் கோயிலில் கொடியேறும்..

நவம்பர் 3ம் தேதி இரவு பள்ளிவேட்டை..

4ம் தேதி மாலை 6.30க்கு ஆறாட்டிற்கு எழுந்தருளல்.. இரவு தளியலில் ஆறாட்டு

....இரண்டாம் விழா முதல் தினமும் இரவு 10 மணிக்கு கதகளி...


மழையில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில்...

Photo Credits: திருவட்டாறு சிந்துகுமார்

     |   

Other Pages