Shankara Narayanan & Arthanareeswarar Temple, Thirunattalam (12th Shivalayam)
திருநட்டாலம் சங்கர நாராயணர்: சிவாலய ஓட்டம் நிறைவு பெறும் தலம், திருநட்டாலம். கிழக்கு நோக்கியுள்ள ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரராக அருட்காட்சி வழங்குகிறார், ஈசன். எதிர்புறத்தில் உள்ள ஆலயத்தில், மகாவிஷ்ணு, சங்கரநாராயணராக அருள்கிறார். நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது இந்த தலம். இங்குதான் புருஷாமிருகத்துக்கு சைவ-வைணவ பேதம் எனும் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. பீமனுக்கு தன் தசை வலியின் மீதிருந்த கர்வத்திலிருந்து விடுதலை கிடைத்தது. தருமம் கொலுவேற்க மிருகமும் மனிதமும் இணைந்த நம்மில் இருக்கும் பேத வெறிகளை விட்டொழித்து இரண்டற்ற ஒன்றான உண்மையின் உள்ளொளியை பெறுவோம். அந்த உள்ளொளி பெறும் போதுதான் நம்முள் சுரக்கும் நன்மை தர்மத்தின் கைங்கரியத்துக்கு பயன்பட முடியும். ஒவ்வொரு மகாசிவராத்திரியின் போதும் காவி போர்த்தி கால் வலிக்க ஓடும் கோவிந்தன்மார் சொல்லும் செய்தி நமக்கு இதுதான். கோவிந்தன்மாரை இயக்குவது அழிவற்ற தருமத்தின் சக்தி. ஸ்ரீ கிருஷ்ணனின் ஞானம். பேதமற்ற அந்த ஞானத்தை எல்லாம் வல்ல எல்லோருள்ளும் எல்லாவற்றுள்ளும் உறையும் சிவம் நமக்கு அருளட்டும்.
"கோபாலா கோவிந்தா"
“யாரைக் காண”
"சாமியை காண"
“சாமியைக் கண்டால்”
“மோட்சம் கிட்டும்”
“எப்போ கிட்டும்”
“இப்போ கிட்டும்”
மோட்சம். விடுதலை. எங்கோ என்றோ இறப்புக்கு பின் அல்ல. இங்கே இப்போதே…
3 | 3k views