
குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் கிடையாது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கிராமத்தை சேர்ந்த மீனவ மக்கள் கிறிஸ்தவ சமயத்தில் இருக்கின்றனர். பல மீனவ குடும்பங்கள் ஆலயத்துக்கு சொந்தமான இடத்திலே வீடுகளை அமைத்திருப்பதால் டாஸ்மாக் கடைகள் மீனவ கிராமங்களில் அமைக்க பலத்த எதிர்ப்பு உள்ளது. சாதரணமாக போராட்டக் குணம் உடையவர்கள் மீனவர்கள். அலைதாண்டி வந்த அசதி தீர மதுக்குடிப்பார்கள். பல மீனவர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதால் சின்ன சின்ன பிரச்சனைகளும் பெரும் கலவரத்துக்கு வழி வகுக்கின்றன. இப்போதும் பஸ் ஏறி போய் தான் மீனவர்கள் குடிக்கிறார்கள்.
மீனவ கிராமங்களை சுற்றி பல கிலோ மீட்டர் தூரத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு திறந்து தான் வைத்திருக்கிறது.


Posted by