அக்டோபர் 16, 1799


தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீர மன்னர் கட்டபொம்மன். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து அவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்.1797-ல் முதன் முதலாக ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மனிடம் போரிட்டு தோற்றுப்போனார்.

1799-ல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது. பாஞ்சாலன்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் பதுங்கினார். எனினும் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கட்ட பொம்மன் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16, ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாற்றில் ஒரு மைதானத்திலிருந்த பெரிய புளிய மரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

views: 983