For Advertising... Please Contact - 9940542560

Chembu Halwa - செம்பு அலுவா

     |   

செம்பு அலுவா..!! செய்வது எப்படி?

ஒருகாலத்தில் வீட்டில் செம்பலுவா செய்கிறார்கள் என்றால் சின்னம்மா பெரியம்மா எல்லாம் காலையிலேயே வீட்டிற்கு வந்து ஊறவைத்த அரிசியை உரலில் இருவர் இடிக்க இன்னொருவர் தேங்காய்பால் பிழிய விடே கல்யாணகளை கட்டியது போல் பரபரப்பாக இருக்கும்.

அப்படி, ஒரு காலத்தில் விழாக்கோலம் பூண்டு செய்யப்பட்ட செம்பலுவா இன்றைய தலைமுறையினருக்கு வலுவில்லாத காரணத்தினாலோ அல்லது பிள்ளைகளை எல் கேஜியில் சேர்ப்பதைக் கூட ஏதோ எம்பிபிஸ் படிப்பது போன்று அவர்களோடு வீட்டம்மைகளும் எக்ஸாம் எழுதுவது போன்று பிள்ளைகளோடு பிஸியாகிவிட்ட காரணத்தாலோ என்னவே இது போன்ற விசயங்களுகு இறங்காமல் செம்பலுவாவா.. கிண்ணத்தப்பமா.. கடையில் வாங்கு என்ற நிலைக்கு வந்து விடுகிறார்கள்.

ஆனால் நிஜத்தில் இது போன்ற பாரம்பரிய உணவுகள் ஒருவராலே எழிதாக செய்துவிட முடியும் , அப்படியானால் அன்று ஏன் இதைச் செய்கிறேன் என்று குடும்பமே கூடி தேர் இழுத்தார்கள்.. நிஜத்தில் சொந்தங்கள் ஒன்று கூடி மகிழ இதுபோன்ற தருணங்களை காரணமாக்கிக் கொண்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சமையலில் ஆர்வம் துவங்கிய நாட்களிலிருந்து நம் பாரம்பரிய உணவுகளில் காணமல் போய்க்கொண்டிருக்கும் உணவுகளை அதன் ஒரிஜினல் ரெசிப்பீகளைத் தேடி, அதன் ஒரிஜினாலிட்டி சிதைந்து விடாமல் அதை எளிமைப் படுத்தி நாம் பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில் செம்பலுவா செய்வது எப்படி என்பதையும் இங்கு சொல்லித் தருகிறோம்.

செம்பு அலுவா என்கிற பெயர், செம்பு, அல்லது பித்தளையில் செய்த பெரிய உருளியில் இதைச் செய்வதால் உருளிக்கு செம்பு என்று ஒரு பெயரும் உண்டு அதன் காராணமாக இதைச் செம்பு அலுவா என்று அழைக்கப்பட்டிக்கிறது என்று சொல்கிறார்கள்.

நாம் இதை உருளியில் செய்யாமல் நல்ல கெட்டியான இரும்பு தவா வில் செய்திருந்தாலும் இது செம்பு அலுவாதான்.

Courtesy: Mohammed Sainuddin

     |