For Advertising... Please Contact - 9940542560

Clock Tower - Monimedai

Tower Junction, Nagercoil  |      2  |   

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் முக்கியஅடையாளமாக இருப்பது மணிமேடை மணிக்கூண்டு ஆகும்.

மணிகூண்டு இருப்பதாலயே இப்பகுதிக்கு இப்பெயர் வரப்பெற்றது. இம்மணிக்கூண்டு 1893 ம் ஆண்டு பிப் . 15 தியதி திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

அந்த காலத்தில் இந்த மணிக்கூண்டில் இருந்து வரும் ஓசை 2 கிலோமீட்டர் அப்பாலும் கேட்டதாக ஒருசெவிவழி செய்திஉண்டு.

இம்மணிக்கூண்டுயில் உள்ள கடிகாரம் ஆனது எடை தாங்கிய 60அடி நீள சங்கலியால் இணைக்கப்பட்டு கம்பி மூலம் புவிஈர்ப்புவிசையை அடிபடையாக வைத்து இயங்ககூடியது.

இன்று நாம் சுற்றுலா செல்வது போல அந்தக்காலத்தில் , இந்த மணிக்கூண்டை காண்பதற்காக பூதப்பாண்டி , மார்த்தாண்டம் , கன்னியாகுமரி..... என்று மாவட்டதில் பலபகுதிகளிலும் இருந்தும் மக்கள் வந்து பார்த்துசெல்வார்கள் .

இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் முதன்முதலாக பேருந்து சேவை துவங்கும் பொழுது மணிமேடை அருகில் உள்ள வேப்பமூடு பகுதியில் பேருந்துநிலையம் ஏற்படுத்தப்பட்டது.

1893ஆம் ஆண்டு ஆகஸ்டு 22ம் தியதி வெளியான திருவிதாங்கூர் அரசு குறிப்பேட்டில் உள்ள தகவலின் படி, லண்டன் திருசபை சேர்ந்த் வெளிநாட்டை மறை .திருடதி , ஹூவெர்ப் , ஹோர்ஸ்லி ஆகிய3 பேரும் நாகர்கோவிலை சேர்ந்த கிருஷ்ணன்அய்யர் , ரத்தினசாமி அய்யர் , ஆகியோர் இணைந்து இம்மணிமேடையை கட்டினார்கள். அதன் கட்டுமான பணிகள் 1892 ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்டில் நிறைவு பெற்றது. மணிமேடையை கட்டுவதற்க்கு அன்றைய காலத்தில் 3258 ரூபாய் 9 சக்கரம் 12 காசு செலவானதாகவும். மணிமேடையை 1893 ஆண்டு பிப். 15 தியதி ஸ்ரீ மூலம் திருநாள் அவர்களால்திறந்துவைக்கப்பட்டது.. இவ்வாறு குறிப்பேட்டில் உள்ளது..

மேலும் மணிக்கூண்டை கட்டுவதற்கு ரூபாய் 1017. மட்டும் மன்னர் சார்பில் வழங்கப்பட்டது ,மீதி தொகை பொதுமக்களிடம் இருந்து பிரிக்கப்பட்டது ஆகும்.

மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் லண்டன் திருசபை சார்பில் மன்னர் .ஸ்ரீ மூலம். திருநாள் அவர்கள் மன்னராக பதியேற்றதற்காக வழங்கப்பட்டதாகும்.

மேலும் கடிகாரத்தை அரண்மணை நுழைவாயிலில் வைக்க முடிவு செய்யப்பட்ட பொழுது லண்டன் திருசபை சார்பில் தற்பொழுது பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி அருகில் உள்ள கற்கோவிலில் இருந்து பார்த்தால் தெரியும் தூரத்தில் மணிக்கூண்டு அமைத்து நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் , இந்த இடத்தில் வைத்ததாக செவி வழி செய்தியும் உண்டு.

தற்பொழுது இதை சரி செய்ய தெரிந்த தொழிலில்நுட்பம் தெரிந்தவர்கள் இல்லை என்ற காரணத்தினால் அதன் மணி ஓசை அதிகமாக கேட்க வில்லை , இருபினும் என்ன நூற்றாண்டு கடந்தும் கம்பீரமாக இருக்கும் அது நம் நகரின் அடையாளம் மாறி உள்ளது.

இம்மணிக்கூண்டு நம் நகரின் அடையாளமாக இருக்கின்றதால் , 1972 திரு. எம்ஜி_ராமசந்திரன் அவர்களால் , நம் மண்ணின் மைந்தன் திரு. கலைவாணர் .என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது.

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Clock Tower, Tower Junction, Nagercoil


   2  |   

Other Pages

Related Posts