
கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட 341 பயனாளிகளுக்கு அவரவர் குறைபாடுகளுக்கு ஏற்ப (கை மற்றும் கால்கள் குறைபாடு,பார்வை குறைபாடு காது கேட்கும் குறைபாடு ) சுமார் 7 லச்சத்தி 64 ஆயிரத்தி 163 ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினர். முன்னதாக விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தமிழகத்தில் முதல்வர் பெயரில் இயங்கி வந்த காப்பீடு திட்டம் இனி பிரதமர் பெயரில் இயங்கும்.முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை தேவைகளை மனதில் கொண்டு பல்வேறு நல திட்டங்கள் நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார்.
பல லட்சம் ரூபாய் செலவில் செய்யும் காது கேளாதவர்களுக்கான அறுவை சிகிட்சை செய்யும் திட்டம் உட்பட பல நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என பேசினார்.
மீனாஸ் குமார்/ திருவட்டாறு


Posted by