நவராத்திரி விழா விக்ரக பவனி அக்டோபர்-7ல் நடக்கிறது.


குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவராத்திரி பூஜைக்கான சுவாமி விக்கிரகங்கள் பவனி அக்டோபர் 7 ம் தேதி நடக்கிறது . அக்டோபர் 6ம் தேதி சுசீந்திரத்திலிருந்து முன் உதித்த நங்கை விக்கிரகம் புறப்படுகிறது. அக்டோபர் 7ம் தேதி குமார கோவிலிருந்து யானை மீது சரஸ்வதி தேவி விக்கிரகமும் பல்லாக்கில் முருகன் விக்கிரகமும் முன் உதித்த நங்கை விக்கிரகமும் பவனியாக கொண்டு செல்லப் படுகிறது வழி நெடுக பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. 7 ம் தேதி குழித்துறை மகாதேவர் கோவிலிலும் 8ம் நெய்யாற்றின் கரை கிருஷ்ணன் கோவிலிலும் தங்குகிறது . 9 ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது.ஒரு நாள் நல்லிருப்புக்கு பிறகு நவராத்திரி பூஜை துவங்குகிறது.

views: 1698
   1

Related News