
கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் தமிழகக் கோட்டைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி தொடங்கியது
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு (செப். 27) நடைபெறும் இக்கண்காட்சியை, கன்னியாகுமரி அரசு உறுப்புக் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் சகாயசுதா தொடங்கிவைத்தார்.
இதில், தமிழகத்தின் முக்கிய கோட்டைகளான வேலூர், செஞ்சி, திண்டுக்கல், திருமயம், வட்டக்கோட்டை, உதயகிரிக்கோட்டை, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்ட பல்வேறு கோட்டைகளின் புகைப்படங்கள் மற்றும் அவைகளின் வரலாற்று முக்கியத்துவங்கள் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை கன்னியாகுமரி அரசு உறுப்புக் கல்லூரி மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர். இக்கண்காட்சி வருகிற 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அருங்காட்சியக காப்பாட்சியர் வே.கிருஷ்ணம்மாள் தெரிவித்தார்.


Posted by