கன்னியாகுமரி - மீனவர்களுக்கான வானிலை எச்சிரிக்கை


சென்னை வானிலை மையத்தகவலின் படி 27.09.2018 மாலை 5.30 மணி முதல் 28.09.2018 இரவு 11.30 மணி வரை கன்னியாகுமரி மாவட்டம் முதல் இராமநாதபுரம் மாவட்டம் வரை கடல் அலையின் வேகம் *1.0 முதல் 1.5 மீட்டர் உயரம் வரையும் அதற்கு 
மேலும் எழக்கூடும் என்பதால்

1. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள்/பொது மக்கள் எவரும் கடலுக்குள் அல்லது கடற்கரை பகுதிகளுக்குள் செல்லக்கூடாது.

2. கடற்கரை பகுதிகளில்/கடற்கரை ஒரங்களில் வசிக்கும் மீனவர்கள் கடல் அரிப்பில் இருந்து அவர்தம் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள எச்சரிக்கப்படுகிறார்கள்

3.கடற்கரை பகுதியில் பொழுது போக்கு நிகழ்வுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

4. மீனவர்கள் அவர்தம் படகுகளை ஒன்றன் மீது ஒன்று மோதாமல் இருந்து சேதங்களை தவிர்க்க மீன்பிடி படகுகளை பாதுகாப்பான முறையில் இடைவெளி விட்டு நங்கூரம் இட வேண்டும்.

5.மீனவர்கள் கடற்கரை ஒரங்களில் அல்லது மீன்பிடி படகுகளில் வைத்துள்ள மீன்பிடி வலைகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க எச்சரிக்கப்படுகிறது.

6.மீன் பிடி படகுகளை கடலுக்குள் எடுத்து செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த அலை உயர்வின் மூலம் கடலின் மத்திய பகுதியில் பாதிப்பு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


views: 2071
   

Related News