For Advertising... Please Contact - 9940542560

Sanguthurai Beach

Nagercoil  |      3  |   

பொலிவிழந்த 'சங்குதுறை' பீச்

நாகர்கோவில் ஜனங்களுக்கு லீவு என்றாலே கால் நனைக்க ஆசையோடு வருகிற இடம் இது.நகரத்திலிருந்து மிக அருகாமையில் உள்ள எழில்மிகு கடற்கரையாகும்.

அந்த காலங்களில் திருவாங்கூர் மகராஜா ஓய்வெடுக்க வருகிற இடம்கூட.அதுபோல திருக்கோவில்களில் ஆராட்டு நிகழ்த்த புனித நீர் இங்கிருந்தே எடுத்து செல்லப்பட்டுருக்கிறது.இன்றும் நீங்கள் இங்கே திருவாங்கூர் சமஸ்தானத்தின் சங்கு முத்திரையை இங்கு காணலாம்.மீனவர்களின் வாழ்விடமில்லாத இடமாகும்.

அந்த நீண்ட வெண்மணல் பரப்பும் நீல நிறத்தில் தொடு வானமும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்கிறவை, திகட்டதவை, சலிப்பதுமில்லை.விடுமுறை நாட்களில் பெருவாரியாக ஜனங்கள் பொழுதுபோக்க வருவார்கள். இன்னும் இந்த இடம் பெருவணிக வியாபர ஸ்தலமாக மாறாததால் ஓரளவு பாழ்படாத சுத்தமான இடமாகும்.

இயற்கைசூழ் இடமும் நீண்ட கடற்பரப்பும் கொண்டதால் ஆமைகளின் வாழ்விடமும்கூட, ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் அவை இங்கே முட்டையிட வருவதுண்டு.

நேற்று கடற்கரையினை காண சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .கடற்கரையினை கடல் சீற்றம் கெண்டு சீர்குலைந்து போயிருந்தது. கரைகள் உடைக்கப்பட்டு மக்கள் அமர்ந்து கண்டுகளிக்கிற பகுதிவரை அழிந்திருக்கிறது.விரிந்துகிடந்த கடற்கரை சுருங்கி அதன் எழில் இழந்து கரையற்ற கடலாக காட்சியளிக்கிறது.மணல் பரப்பில் கீழிருந்த சுக்கான் பாறைகள் தென்படுகின்றது.

காரணம் சங்குதுறை ஊரினை சுற்றிய பள்ளம் மற்றும் பெரியகாடு ராஜாக்கமங்கலம்துறை போன்ற ஊர்களில் கடல் அரிப்பினை தடுக்க கடலில் கற்களை போடுவதால் இவ்வாறு ஏற்படுகிறது என்கின்றனர். ஏன் அங்கு கடலரிப்பு ஏற்படுகிறது என்றால் அங்கும் இதே மாதிரியாக அந்த ஊர்களைசுற்றிய பக்கத்து ஊர்களில் கற்களை போடுவதால்தான் . எல்லாவற்றிற்கும் ஆதி காரணம் குமரி கடற்கரையில் பகுதி தோறும் பெருகிவரும் துறைமுகங்களே. மேலும் மத்தியரசு கொண்டுவந்திருக்கிற சாகர் மாலாதிட்டத்தின் மூலம் இந்திய பெருங்கடலின் கரைதோறும் நிறைவேற்றபடுகிற பல்வேறு வர்த்தக துறைமுகங்கள் கேளிக்கை விடுதிகள் என்பதாகும்.

அதிகாரிகளால் ஏசி அரங்கங்களில் இருந்து தீட்டப்படுகிற திட்டங்கள் இப்படியான பேரழிவை இந்திய கடற்கரையில் நிகழ்த்தியே தீரும்.

கடலில் அரசு ஏதுவும் செய்கிற போது அந்தந்த பகுதிகளில் வாழ்கிற மீனவ பெருங்கடலோடிகளின் ஆலோசனைகளை அவர்களிடம் கேளுங்கள். அவர்களுக்கு தெரியும் கடலின் போக்கும், நீரோட்டமும், எந்தந்த மாதங்களில் நீரின் ஏற்ற இறக்கங்களும்,கடலின் உள் மடியில் பார்கள் எங்குள்ளன கற்களை எங்கு இடலாம், தூண்டில் வளைவுகள் எங்கு இடலாம் என்கிற அவர்களது பாரம்பரிய அறிவினை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் மட்டுமே கடல் நீங்கள் நினைக்கிற மாதிரி அடங்கிகிடக்கும் இல்லை எனில் பொங்கிவந்து ஊரையே தூக்கி செல்லும்.

மனிதன் அவனது தேவைகளுக்கு ஏதேதோ செய்து பின் எல்லாவற்றையும் இழந்தவனாக வீட்டில் அமர்ந்து தன்னை தனிமைபடுத்திக்கெள்வதில் போய் முடிகிறது.

Courtesy: Jawahar Clicks

One of the famous beach near by Nagercoil City in Kanyakumari District


   3  |   

Other Pages