Tirunelveli News - திருநெல்வேலி செய்திகள்

சுரண்டையில் 3 நாட்கள் முழு கடையடைப்பு..

சுரண்டையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 11ம் தேதி சனி, 12ம் தேதி ஞாயிறு, 13ம் தேதி திங்கள் ஆகிய 3 நாட்களும் முழு கடையடைப்பு நடைபெறும்.

-சுரண்டை வியாபாரிகள் சங்கம் 

அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

06/07/2020:

நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று மட்டும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரை 1,030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 671 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,125-ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்றுக்குள்ளானவர்கள் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி, வள்ளியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

நெல்லையின் நேர்மை குணம்...


திருநெல்வேலி , பாளை வ.உ.சி மைதானத்தில் நடைபயிற்சிக்கு சென்ற வின்சென்ட் அங்கு யாரோ தவறவிட்ட 16 கிராம் தங்க சங்கிலியை பாளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பொருள் உரியவரிடம் சேர்க்கப்பட்டது . அவரது நேர்மையை பாராட்டி சிறு பரிசு வழங்கினேன்.

Arjun Saravanan

Deputy Commissioner of Police. Tirunelveli City



Showing 1 to 2 of 2 (1 Pages)